பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமானங்கள் இணைப்பு!
இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இன்று முதல் விமானப் படையுடன் இணைக்கப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் ரக விமானங்கள் இன்று முறைப்படி விமான படைக்கப்படுகின்றன.
ஹரியானாவில் விமானப்படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையின் கோல்டன் அரோசிஸ் பிரிவில் இணைக்கப்படுகின்றன. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் தலைமை வகித்த நின்று என்று தகவல்கள் கிடைக்கின்றன. விமானப்படை தலைமை செயலர் அஜய்குமார் போன்றோர் கலந்து கொண்டனர்.
விமானங்கள் முறைப்படி பூஜைக்குப் பின்பு நாட்டில் அழைக்கப்படுகின்றன. விழா முடிந்த பின்பு பிரான்ஸ் அமைச்சர் சிவப்பு கம்பள வரவேற்பு பாதுகாப்புடன் வழி அனுப்பி வைக்கப்படுவார். ரஃபேல் விமானங்கள் ஜூலை 29ம் தேதி இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டது.
இதன் மதிப்பு ரூபாய் 59 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் இந்தியாவிற்காக 36 ரஃபேல் விமானங்கள் தயாரித்துக் கொடுப்பதாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் பாதுகாப்பு படைக்குப் பல்வேறு வகையில் வலிமை சேர்க்க நவீன ரக விமானங்கள் ஆயுதங்கள் ஆகியவை மூலம் பல்வேறு புதுமைகள் புகுத்தப்படுகின்றன. பிரான்சின் ரஃபேல் போர் விமானங்கள் நமது பாதுகாப்புத்துறைக்கு தேவை மிக முக்கியமானதாக இருக்கின்றது.
நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு புதுமைகள் மற்றும் நவீன ரகமான ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் அரசு வாங்கி வருகின்றது. ஒரு சில புதிய வகை ஆயுதங்கள் இந்தியாவில் தயாரிக்கவும் வேண்டும் என்றும் அரசு அறிவித்து அதன்படி உள்நாட்டு தயாரிப்பை வாங்க முன்வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்பை மேடு இன் இந்தியா மூலம் ஊக்குவிப்பு கொடுத்துத் தயாரிக்க அரசு திட்டமிட்டு கொண்டிருக்கின்றது.