2023 தீபாவளிக்கு புதுச்சேரி அரசு குடும்ப அட்டைதார்களுக்கு இந்த முறை அறிவித்த தீபாவளி பரிசு என்ன தெரியுமா??
தீபாவளி பண்டிகை இந்த வருடம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12ஆம் தேதி உலகம் எங்கும் கொண்டாடப்படுகின்றது. இன்னும் தீபாவளிக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் பரபரப்பாக தீபாவளி பர்சஸ் நடைபெற்று வருகிறது. வீடுகளில் பலகாரங்கள் சுடுவது, குடும்பத்துடன் சென்று புத்தாடை எடுத்து வருவது, தீபாவளிக்கு விடுமுறை என்பதால் ஏதாவது சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என்று யோசனை என்று பரபரப்பாக தீபாவளி பண்டிகையை நோக்கி பொதுமக்கள் அனைவரும் ஓடிக்கொண்டு உள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு பலகாரங்கள் புத்தாடை பட்டாசு இவை மட்டுமல்லாமல் அரசும் நமக்கு பண்டிகை நாட்களில் பரிசு பொருட்களை வழங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளது. தீபாவளி பொங்கல் ஆகிய நாட்களில் பண்டிகை பரிசாக அரிசி, சர்க்கரை பருப்பு ஆகிய சில பொருட்களை இலவசமாக ரேஷன் கடைகளில் வருடம் தோறும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரி அரசு புதுவித இலவச பரிசை அறிவித்துள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகை என்று சர்க்கரை அரிசி ஆகியவை வழங்குவதே வழக்கம். ஆனால் இந்த முறை புதுச்சேரி அரசானது தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் பொருளுக்கு பதிலாக பணமாக தர முடிவு செய்துள்ளது.
ஆம் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த முறை தீபாவளி பண்டிகைக்கு ரூபாய் 490 வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தீபாவளி பணமானது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவரவர்களின் வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்கள் என புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.