வீட்டிலேயே கற்றாழை ஷாம்பூ தயாரிக்கு முறை..!
வீட்டிலேயே கற்றாழையை கொண்டு ஷாம்பு செய்து கேசத்தை பாதுகாப்போம். ஆயிரக்கணக்கில் முடி பராமரிப்பிற்க்காக செலவு செய்து கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றோம் அவற்றால் நமக்கு நிரந்திரமான தீர்வு கிடைக்கின்றதா என்றால் அது சற்று கடினமே . குறைந்த செலவிலான பட்ஜெட்டில் அடங்கும் கற்றாழை ஷாம்பு செய்யும் வழிமுறைகளை இங்கு கொடுத்துள்ளோம். இயற்கை முறையில் உங்களின் அழகை பராமரித்து ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள்.
கற்றாழையை வைத்து நாம் வீட்டிலேயே ஷாம்பூ செய்து நமது கூந்தலினை பாதுகாத்து தலையில் பேன், பொடுகு, முடிவெட்டு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனை களிலிருந்து நம்மையும் நமது வீட்டிலுள்ளோர்களையும் பாதுகாத்து இயற்க்கையான தற்சார்பு வாழ்வு முறையினை நோக்கி நகர்வோம்.
கற்றாழை மடலிலுள்ள சோற்று பகுதியை எடுத்து நீக்கிவிட்டு அதனை கொண்டு தாயரிக்கும் ஷாம்பூ ஆரோக்கியமான சில்கி மற்றும் போசாக்கு மிகுந்த கூந்தல் வளர்ச்சியை தூண்டும் அதனால் இயற்கை முறையில் செய்யும் பொழுது கூந்தல் உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.
தேவைப்படும் பொருள்:
கற்றாழை ஷாம்பூ செய்ய கற்றாழை மற்றும் பூங்ககாய் இரண்டு தேவையான பொருள்கள் வேண்டும். கற்றாழையை சோற்றுப் பகுதியை நீக்கி அவற்றின் மஞ்சள் நிற நீர்மை திரவம் வெளியேறி வடியும் வரை 2 மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்பு கற்றாழையின் சதைப்பகுதியினை நன்கு எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.
பூந்திக்காய் எனப்படும் சோப்நட்ஸ் நுரை வளம் கொண்டது. பூங்ககாயை பூந்திக்காய் என்றும் சோப்நட்ஸ் என்றும் அழைக்கப்படும். இது தோலுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுத்து சில்கியாக இருக்க உதவுகின்றது. இயற்கையான நுரை வளத்துடன் கூந்தலில் உள்ள மாசை நீக்குகின்றது. நாட்டு பூந்திக்கொட்டை மற்றும் ஹைபிரிட் பூந்திக்கொட்டை இரண்டு வகைகள் உள்ளன. நாட்டுவகை பூந்திக்காயின் கொட்டைகள் சிறிதாக இருக்கும். ஆனால் ஹைபிரிட் சோப்நட்ஸ் கொட்டைகள் பெரிதாக இருக்கும் அதனை நீக்க வேண்டும்.
பூந்திக்காயினை அரை லிட்டர் அளவு நீரில் 10 மணிநேரம் ஊரவைக்க எடுத்து கொள்ள வேண்டும். கற்றாழை ஜெல்லின் கலவை மற்றும் ஊர வைத்த பூந்திக்கொட்டை யினை நீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு மாதம் இதனை பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அதனை பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது பயன்படுத்தலாம்.
அதனை கொதிக்கச் வைத்து வடிகட்டியில் கண்ணாடி பாட்டிலில் வைத்து ஒரு மாதம் பயன்படுத்தலாம