மங்களத்தை தரும் மார்கழி பவுர்ணமி
மார்கழி பௌர்ணமி தினத்தில் இறைவனை வழிபட வேண்டும். இதனால் உடல், மனம், ஆன்மாவினால் செய்த பாவங்கள் இறைவனின் அருளால் நீங்குகிறது. மனதில் நல்ல சிந்தனைகளும் எண்ணங்களும் எப்பொழுதும் தோன்றும். வீட்டில் அனைத்து வளங்களும் பெருகும்.
பயம், கவலைகள், நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மார்கழி பவுர்ணமி அதிகாலை எழுந்து குளித்து விட்டு முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். மூன்று வேளையும் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும்.
சிவன் அல்லது விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். காலை சிவன், மாலை பெருமாள் என உங்கள் வசதிக்கு ஏற்ப இந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும். சிவன் அல்லது விஷ்ணு கோவிலுக்கு செல்வது அவரவர்களின் விருப்பம்.
உங்களால் முடிந்த ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடலாம். மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். விரதம் இருப்பவர்கள் இரவில் வழிபாடு முடித்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.