சினிமா

உங்க வீட்டுக்கு பொன்மகள் வந்தாள் ஆ!!!

பொன்மகள் வந்தாள் பாத்தீங்களா!!!

அருமையா வந்துருக்காங்க போய் பாருங்க…

தற்போது பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு ஏற்படும் சமூக பிரச்சினை பற்றிய பல படங்கள் வந்தாலும் இந்த படம் தனித்துவமாக விளங்குகிறது.

ஜோதிகாவின் அசத்தல் நடிப்பில் படம் பட்டையைக் கிளப்பி உள்ளது. படக்குழுவினரின் பட்டியலை கொண்டே படத்தை அமர்களம் படுத்தியுள்ளார் இயக்குனர் ஜே.ஜே. பிரெட்ரிக் மற்றும் தயாரிப்பாளர் சூர்யா.

அறிமுக இயக்குனர் என்ற ஒரு சுவடும் இல்லாமல் படத்தை  நன்றாக எடுத்துள்ளார் பிரெடரிக். குளிர் பிரதேசமான ஊட்டியில் முழுக்க முழுக்க படத்தின் கதை நகர்கிறது.

சீனியர் நடிகர்கள் துணை :

பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜ், பார்த்திபன், தியாகராஜன், வினோதினி வைத்தியநாதன், சுப்பு பஞ்சு போன்றவர்கள் துணை நடிகர்களாக ஜோதிகாவுடன் படத்தை முழுமைப் படுத்தி உள்ளனர். எதற்கெடுத்தாலும் பெட்டிஷன் போடும் கதாபாத்திரத்தில் பெட்டிஷன் பேத்துராஜாக பாக்கியராஜ், வரதராஜன் என்னும் பெயரில் அரசியல்வாதியாக தியாகராஜன், நீதிபதியாக பிரதாப் போத்தன், நீதிபதிக்கு துணையாக மற்றும் நண்பராக பாக்யராஜ், ஜோதிகா வினோதினி பார்த்திபன் ஆகியோர் வக்கீல்களாக மற்றும் சுப்பு பஞ்சு போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளனர்.

ஊட்டியில் மர்மமாக காணாமல் போகும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளப்படும் பெண் குற்றவாளியை அரசு தண்டித்து விடுகிறது. பிறகு இப்படத்தை லேசாக சற்று நகைச்சுவையுடன் டீ மாஸ்டர், ஜமீன்தார், பெட்டிஷன் போடுபவர், அவரை நம்பியே ஒரு வக்கீல் என்று கதை நகுர்கிறது. அந்த பழைய சம்பவம் நடந்து பதினைந்து வருடத்திற்கு பின் தண்டனை கொடுக்கப்பட்ட அந்த பெண் குற்றவாளியே அல்ல என்று வாதாடுவதற்காக முதல் முறையாக வக்கீலாக ஆஜராகி கலக்குகிறார் ஜோதிகா. பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும் அவர்

“இது ஒன்றும் விளையாட்டில் வெற்றி தோல்வி காண… ஜஸ்டிஸ்…” 

என்னும் ஜோதிகாவின் சொற்கள் பலரை சிந்திக்க வைத்துள்ளது

பல திருப்புமுனைகளுடன் கதையை அழகாக நகர்த்தியுள்ளார் இயக்குனர். முக்கால்வாசி படம் நீதிமன்றத்திலேயே நடைபெறுகிறது. பெட்டிஷன் பேத்துராஜ் எப்பொழுதும் ப்ளூடூத் ஹெட்செட்டை மாற்றிக் கொண்டு வருவது குளிக்கும் போது அது இதைக் வருவாரா என்று நக்கல் அடிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் அந்த ப்ளூடூத் ஹெட்செட் இல்லாமல் வாலிபராக காட்சி அளித்துள்ளார் பாக்கியராஜ்.

பார்த்திபனின் நா சுழற்சிக்கு ஏற்றவாறு வக்கீல் கதாபாத்திரம் நச்சென்று இருந்தது. கம்பீரமான வில்லனாக தியாகராஜன் மிரட்டியுள்ளார். ‘நியாயமான நீதிபதிக்கும் சூழ்நிலையால் தப்பு செய்யக் கூடும் ஆனால் நியாயம் தோற்காது’ என்பதுபோல பிரதாப் போத்தன் நடிக்க அவருக்கு துணையாக பாக்யராஜ் அசத்தியுள்ளார்.

தியேட்டர்களில் படத்தை எப்பொழுது வெளியிடுவது என்று தெரியாத நிலையில் OTTயில் ரிலீஸ் செய்துள்ளனர். அமேசான் ப்ரைமில் இந்த படம் 29 மே அன்று ரிலீஸ் ஆனது. 

தியேட்டர் போன 120 ஒரு டிக்கெட் பாப்கான் ஜுஸ்னு 200 ஆயிடும். அதே அமேசான் பிரைம் ஒரு மாத சந்தா 129 மட்டுமே வீட்டிலேயே எல்லாம் ஸ்நாக்ஸ் வந்துரும் எப்படிப்பார்த்தாலும் லாபம்தான். குடும்பமா ஒக்காந்து படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *