கிடுகிடுவென உயரும் சிலிண்டர் விலை.. பொதுமக்கள் வேதனை
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானியத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆரம்பத்தில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மானியம் வழங்கப்படாமல் சந்தை விலையில் விற்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 100 ரூபாய் அளவுக்கு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. கிடுகிடுவென உயரும் சிலிண்டர் விலை.. பொதுமக்கள் வேதனை. தேவைப்படுபவர்களுக்கு மானியம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
- பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சிலிண்டர் விலை
- மானியம் வழங்கப்படாமல் சந்தை விலையில் விற்கப்படுகின்றன.
- சர்வதேச அளவில் எல்பிஜி விலையை பொறுத்து விலையை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் எல்பிஜி விலை
சர்வதேச அளவில் எல்பிஜி விலையை பொறுத்து விலையை நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தை பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை குறைந்தால் வரியை கூடுதலாக விதித்து வருமானத்தைப் பெருக்கலாம். விலை உயர்ந்தாலும் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரிகள் மூலம் தொடர்ச்சியான வருமானம் கிடைத்துவிடும்.
பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சிலிண்டர் விலை
தற்போது வேலை இழப்பு மற்றும் சம்பள குறைப்பு குடும்பத்தின் நிதி நிலைமை நெருக்கடியில் இதுபோன்ற சிலிண்டர் விலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. முதன்முறையாக டிசம்பர் மாதத்தில் மட்டும் இருமுறை எல்பிஜி விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது மாதமொருமுறை எல்பிஜி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தை ரூபாய் ஏற்ற இறக்கத்தை பொறுத்து வாரம் ஒரு முறை விலையை மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் சரிவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கருதுகின்றன. உறுதிப்படுத்தப்படாத தகவல் சாத்தியமுண்டு.