பென்குயினின் ட்ரெய்லர் பீஸ் எப்படி
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் பென்குயின். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் திரையுலகிற்கு பென்குயின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். அவரே இக்கதையை எழுதி இயக்கியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் படத்தை தயாரித்து சந்தோஷ் நாராயணன் அவர்களால் இசையமைக்கப்பட்ட இப்படம் 19 ஜூன் 2020 திரையரங்குகளில் வெளியிட இருந்தது. கொரோனாவின் காரணத்தினால் அதே தேதியில் அமேசான் பிரைமில் வெளியிட உள்ளனர்.
மும்மொழிகள்:
பென்குயின் ஒரு மொழில பேசலங்க மும்மொழியில பேசுது.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
திகிலூட்டும் டீசர்:
8 ஜூன் 2020 ‘மர்ம திகில்’ படமாக பெண்குயின் டீசர் காட்சியளிக்கிறது. இந்த டீசரை விடிவி த்ரிஷா கிருஷ்ணன், நீதானே என் பொன்வசந்தம் சமந்தா அக்கினேனி, அசுரன் பச்சையம்மாள் மஞ்சு வாரியர் மற்றும் ஆடுகளம் ஐரின் டாப்ஸி பன்னு அவர்களால் மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
“Behind all your stories there is a mother’s story”
டீசரில் வரும் இந்த வாக்கியத்த வைத்து கதையை ஓரளவுக்கு யூகம் செய்தோமாயின்; கீர்த்தி சுரேஷ் அம்மா கதாபாத்திரத்திலும் அவர்களுக்கு ஒரு மகன் இருப்பது போன்ற காட்சியும் பின் தொலைந்து போன தன் மகனின் பெயரை கூவுவதும். காணவில்லை போஸ்டரை கையில் வைத்து பாவமாக பார்ப்பதும், பின் ஏதோ ஒரு செய்தியை கேட்டு அலறி கொண்டு ஓடுவதும் என்று தொடர கடைசியாக திகிலூட்டும் வகையில் ஒரு முகமூடி மனிதனுடன் டீசரை முடித்துள்ளனர்.
டீசரை ‘லேடிஸ் ஒன்லி’ங்கர மாதிரி கதாநாயகிகளை கொண்டு வெளியிட்ட பெண்குயின் திரைப்படக் குழு; ட்ரெய்லரை ‘ஜென்ஸ் ஒன்லி’ டிசைட் பண்ணி இருக்காங்க.
ட்ரெய்லர் வெளியீடு:
12 ஜூன் 2020 பென்குயின் படத்தின் டிரைலர் மூன்று மொழிகளிலும் அந்தந்த மொழி சார்ந்த முன்னணி நடிகர்களைக் கொண்டு அமேசான் ப்ரைமில் மதியம் 12 மணிக்கு வெளியிட உள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரும் பெண்குயின் படத்தின் தமிழ் ட்ரேய்லரை நம் ரவுடி பேபி மாரி அண்ணன் திரு. தனுஷ் அவர்கள், தெலுங்கு ட்ரேய்லரை லோக்கல் மிடில் கிளாஸ் ஆம்பள திரு. நானி அவர்கள், மலையாள ட்ரேய்லரை லூசிபர் சேட்டா திரு. மோகன் லால் அவர்கள் என முப்பெரும் கதாநாயகர்கள் அமேசான் பிரைமில் வெளியிட உள்ளனர்.
கொரோனாவால் அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அமேசான் கம்பெனியும் சினிமா துறையும் கைகோர்த்து இப்படியே செய்கின்றனர். லாபம் நஷ்டம் பாராமல் திரைப்படங்களை பொதுமக்களிடம் சேர்க்கும் இவர்களுக்கு ஒரு பாராட்டு தெரிவித்து ட்ரைலரை இரசித்து படத்திற்காக காத்திருப்போம்.