முடக்கு வாதம் Arthritis நீங்கி குணமடைய
முடக்கு வாதம் உண்டாவதற்கான காரணம்
சரியான காரணம் தெரியாது. சரீரத்தில் ஏதோ ஒரு எதிர்ப்பு சக்தியின் குறைபாடாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிகிச்சை முறை
ஒவ்வொரு நாளும் இரண்டு முறை பாதிக்கப்பட்ட மூட்டுக்களுக்கு 5 நிமிடம் வரை கொதி நீர் ஒத்தணம் கொடுக்கலாம்.
கைவிரல்கள் பாதிக்கப்பட்டிருந்தால் விரல்களை ஒரு கோப்பை இள வெந்நீரில் வைத்தபடி ஆட்டி அசைத்து 5-15 நிமிடங்கள் வரை அப்பியாசம் செய்யலாம்.
சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய் களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.
முடவாட்டுக்கால் ரசம் 30 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம்,தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.
கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.
கீல்வாதம், முடக்குவாதம், மூட்டுவாதம், போன்றவற்றை தணிக்கும். மேகவெட்டை நோயை குணமாக்கும். நீரிழிவு நோய் தணிக்கும். காய்ச்சலை குறைக்கும். மனச்சோர்வுப் போக்கும்.
வீக்கத்தை போக்கி, வலியை குறைக்கும். சிறுநீர் எரிச்சலை போக்கும். கொழுப்பை கொலஸ்ரால் அளவை குறைக்கும். நீர்க்கோவையை நீக்கும். பூஞ்சையினால் ஏற்டும் தோல் நோயை குணமாக்கும்.
வயிற்றுப் பூழுக்களை அகற்றும். மேலும், ஆக்சிகரண எதிர்ப்புப் பொருள், நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும். தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும்.
முடவாட்டுக்கால் கிழங்கு : சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகை களில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் ஆகும். இம்மூலிகையில் கிழங்கு பகுதியில் மட்டுமே அபூர்வ மருத்துவ குணம் அடங்கியுள்ளது.
முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் : முடவன் – ஆட்டும் – கால் என்பதாகும். அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் அல்லது சூப் செய்து கொடுத்தால் மூட்டுவலி, முடக்கு வாதம் Arthritis நீங்கி குணமடைவார்கள்.
முடக்கு வாத நோயினை இதற்கு கீழே கூறப்படும் பராமரிப்பு முறையினால் தடுத்துக் கொள்ளலாம்.
ஒரு மூட்டிலே அதிக நோவு உண்டானால் இந்த மூட்டுக்கு கட்டாய இளைப்பாறுதல் கொடுத்தல் அவசியம். முழங்கால் அல்லது முழங்கையடியாயிருத்தால் அதை அசைக்காது கட்டிலில் போட்டு வைப்பது மூட்டுக்கு கூடுதலான ஆறுதலைக் கொடுக்கும்.
கடுமையான நோவு 1,2 நாட்களில் குறைந்ததும் (மருந்தின் உதவியுடன்) ஒரு நாளைக்கு 2,3 முறை அந்த மூட்டை முற்றாகவோ அல்லது கூடியளவிற்கோ நோவு ஏற்படாதவாறு அசைக்க வேண்டும்.
முழங்காலின் கீழ் தலையணை வைக்க வேண்டாம். தாக்கப்படாத பாகமும் நாளைக்கு பல தடவைகள் அசைக்கப்பட வேண்டும்.
இடுப்புப் பூட்டிலே தாக்கம் உண்டானால் நாள் ஒன்றுக்கு 2,3 மணித்தியாலம் வயிற்றிலே படுத்தால் அந்த நிலையான உருக்குலைவு இடுப்பு பூட்டிலே உண்டாவதை குறைக்கலாம். அனேக நாட்களுக்கு ஒரு மூட்டு பாவிக்கப்படாதிருந்தால் சுற்றியுள்ள தசைகளில் தேய்வு உண்டாகும்.