Pandian Stores : சரவணனுக்கு Ok சொல்வாரா தங்கமயில் !!!!
நமது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சரவணனுக்கு பெண் பார்க்க ஒட்டுமொத்த குடும்பமும் செல்கிறது. சரவணன் மயில் ஏற்றுக் கொள்வாரா பார்க்கலாம்.
நமது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சரவணனுக்கு இப்பொழுது ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கப்போகிறது. அவருக்கு மட்டும் இல்லை அந்த குடும்பத்திற்கு இது ஒரு மிகப்பெரிய சந்தோஷம் அனைவரும் மாறி மாறி சபதம் விட்டு கடைசியில் சரவணனுக்கு ஒரு பொண்ணு கிடைத்து விட்டது.
பெண் பார்க்க போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
சரவணனுக்கு பெண் பார்ப்பதற்காக அனைவரும் சந்தோஷமாக கிளம்பி சென்று விட்டனர். பெண் வீட்டாரும் சந்தோஷமாக அனைவரையும் வரவேற்று திருமணம் சம்பந்தமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு உள்ளனர். பாண்டியன் ஒட்டு மத்த குடும்பத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களின் உண்மையான நிலையை பற்றி உன்னதமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார் ஆனால் அங்கு தங்க மயிலின் குடும்பத்தில் சொன்ன அத்தனையும் பொய் என்று இவர்களுக்கு தெரியவில்லை.
சரவணனுக்கு ஓகே சொல்வாரா மயிலு..
அனைவரும் சந்தோஷமாக திருமணத்திற்கு தேவையானவற்றை பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நமது தங்கமயில் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே சரவணன் அவருக்கு பிடிக்கவில்லை. எவ்வளவு தூரம் சொல்லியும் பெற்றோர் கேட்காமல் முடிவு செய்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் இருக்கிறார் தங்கமயில்.
இந்த நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் ஆகிய இருவரும் தனியாக பேச செல்கின்றனர். தங்கமயில் உண்மையை உடைத்து சரவணன் இடம் சொல்லி விடுவாரா அல்லது சரவணனை ஏற்றுக் கொள்வாரா என்று பார்க்கலாம்.