இந்திய கொடியை பயன்படுத்தும் பாகிஸ்தானியர்கள்….!
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி பாகிஸ்தான் மாணவன் உக்ரைனை விட்டு வெளியேறியதாக இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையே 6 வது நாளாக போர் நடத்து வருகிறது. இதனைதொடர்ந்து உக்ரைன் தலைநகர் கிவ் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா படைகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், உளவு அமைப்பின் தலைமையக, பாதுகாப்பு அமைச்சக கட்டிடம், தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறி வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இர்தனையடுத்து தலைநகர் கிவ்வில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்தியர்கள் பலர் அவசரமாக வெளியேறி வந்த போது, இந்திய மாணவர் ஒருவர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு தீவிரம் காட்டிய நிலையில், இந்திய கொடியை பயன்படுத்தி, உக்ரைனில் இருந்து ருமேனியா வந்தடைந்த இந்திய மாணவர்கள் கூறுகையில், ‘‘போர் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான், துருக்கி மாணவர்கள் இந்தியக் கொடியை பயன்படுத்துகின்றனர். “இந்தியக் கொடி மற்றும் இந்தியர்கள் இருவரும் பாகிஸ்தான் மற்றும் துருக்கிய மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தனர்” என்று தெரிவித்தனர். இன்று அதிகாலை இஸ்தான்புல் வழியாக சிறப்பு விமானத்தில் சுமார் 220 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.