சினிமா

புத்தம் புது காலையை தொடரும் பாவ கதைகள்

அமேசான் ப்ரைம்க்கு போட்டியாக வரும் நெட்ப்ளிக்ஸ். 16 அக்டோபர் 2020 புத்தம் புது காலை வெளியாக காத்திருக்கும் சமயத்தில் நெட்பிளிக்ஸ் பாவ கதைகள் என்னும் குறும்பட தொகுப்பை வெளியிட உள்ளது. நெட்பிளிக்ஸ் வெளியாகும் முதல் தமிழ் இணைய தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர்களின் சங்கமம்

புத்தம் புது காலை இணைய தொடர் கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி மணிரத்னம் என ஐந்து இயக்குனரின் குறும்பட சங்கமம்.

காதலைக் கதைக் கருவாகக் கொண்ட இந்த இணைய தொடரில் வரும் ஐந்து குறும்படங்கள் என்னென்ன என்பதை அறிவீர்களா! ரியூனியன், காபி எனி ஒன்?, இளமை இதோ இதோ, அவரும் நானும்/அவளும் நானும் என காதல் நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கத்தை மையமாகக் கொண்டு குறும்படங்களை கொரோனாவின் விதிமுறைக்கு உட்பட்டு உருவாக்கியுள்ளனர்.

பாவக் கதைகள்

அந்தாலஜி என்று சொல்லப்படும் குறும்படங்களின் தொகுப்பாக வெளியிட இருக்கும் பாவ கதைகள் நெட்பிளிக்ஸின் முதல் முதலாக வரும் தமிழ் இணையத் தொடர். கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து கலக்கும் பாவ கதைகள்.

புத்தம் புது காலை மற்றும் பாவ கதைகள் இவ்விரண்டிலும் ஒற்றுமையான ஒன்று இரு இயக்குனர்கள். கௌதம் வாசுதேவ் மேனன் சுதா கொங்கரா மீண்டும் இணைகின்றனர்.

கதைக்கரு

கௌதம் வாசுதேவ மேனன் இருக்க காதல் இல்லாமல் இருக்குமா! காதலை மையமாகக் கொண்டிருந்தாலும் காதலுக்கு நடுவிலுள்ள உடலையும் மையமாக கொண்டுள்ள கதை தளம்.

இயக்குனர்கள்

நான்கு இயக்குனர்கள் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸின் மீதும் இணைந்து பணிபுரியும் இயக்குனர்களின் மீதும் தம் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன்

சுதா, வெற்றி மற்றும் விக்னேஷ் இவர்கள் மூவருடனும் இயக்குனராக இணைவது இதுவே முதல் சந்தர்ப்பம். இந்த அற்புதமான பெருமையான கதைக் கருவில் இவர்களுடன் இணைந்து வேலை புரிவது என்பது மிகப்பெரிய சந்தர்ப்பம். ஒவ்வொருவரின் பெருமை கௌரவம் மற்றும் அவர்களின் தேர்ந்தெடுப்பு பற்றிய பிரதிபலிப்பே இந்த கதைத் தொகுப்பு.

சுதா கொங்கரா

கதைத் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையும் காதலின் வெவ்வேறு தன்மையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இது நெட்பிளிக்ஸ் மூலம் நாடு முழுவதும் அடைந்ததில் மகிழ்ச்சி.

மேலும் படிக்க : கடலோர கவிதைகள் படம் பாடல் அடி ஆத்தாடி…

விக்னேஷ் சிவன்

நான் நெட்பிலிக்ஸின் மிகப்பெரிய ரசிகன். என் கதைகளை என்னைப்போல் நம்பும் 3 மதிப்பிற்குரிய இயக்குனர்களிலுடன் இணைவது மிகப்பெரிய சந்தர்ப்பம். இந்தத் தொடர் வெளியில் சொல்ல முடியாத மனித உறவின் கருமையான கொடுமையான பக்கத்தை பிரதிபலிக்கிறது.

வெற்றிமாறன்

நெட்பிலிக்ஸுடன் இந்த கதைத் தொகுப்பை கொடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் ஏனென்றால் என் பாணியில் என்னால் கதை சொல்ல முடிந்தது. பாவ கதைகள் இயக்குவதில் இருந்து சுதந்திரம் மன நிறைவாக இருந்தது.

ஒரு பிரம்மாண்ட இயக்குனரின் கதையாக இருந்தாலும் பின்னிப் பெடலெடுக்கும். இங்கோ நான்கு பிரம்மாண்ட இயக்குனர்களின் சங்கமம்! பிரம்மாண்டத்தில் உச்சகட்டமாக இருக்கும் புத்தம் புது காலை மற்றும் பாவ கதைகளுக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

மேலும் படிக்க : பிகில் படம் பாடல் வரிகள் சிங்கப் பெண்ணே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *