உஷார் நிலையில் அணு ஆயுத தற்காப்பு படை :- கலக்கத்தில் உலக நாடுகள்
அணு ஆயுத தற்காப்பு படையை உஷார் நிலையில் இருக்குமாறு ரஷ்யா அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது 4 வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் மக்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைனின் மாநகரங்களில் ஒன்றான #Kharkiv நகரத்தை ரஷியப் படைகள் கைப்பற்றியதாக செய்திகள் வெளியான நிலையில் உக்ரைனிய படைகளின் முழு கட்டுப்பாட்டில் கார்கிவ் நகரம் உள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் உலக தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார். மேலும் அவ்வப்போது வீடியோக்களில் தோன்றி வீரர்களுக்கும், மக்களுக்கும் உணர்சி பொங்க பேசி வருவார்.
இந்நிலையில் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பலவித தடைகளை விதித்து வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுத தற்காப்பு படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவுக்கு எதிரான ஆக்ரோஷமான நடவடிக்கைகளை NATO நாடுகள் எடுத்தால், அணு ஆயுதங்களை கொண்டு தாக்கி எதிரிகளை தோற்கடிக்க தயார் நிலையில் இருக்கவும் ரஷ்ய ராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்; அமெரிக்கா மற்றும் NATO நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தவே இல்லை என்றும், இல்லாத அச்சுறுத்தல்களின் அடிப்படையில், ரஷ்யா அதன் அணு ஆயுத தடுப்புப் படைகளை அதிக எச்சரிக்கையுடன் வைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.