செய்திகள்தமிழகம்

கைலாச நாட்டின் தன் கொள்கையை பற்றி கூறும் நித்தி

இந்திய பிரஜை ஒருவர் தனிநாடு அறிவித்து நாணயங்கள் மற்றும் பொருளாதார அறிவிப்பை வெளியிட்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் தினசரி நேரலையில் தோன்றும் நிலையில் கூட இந்திய அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கைலாச நித்யானந்தா பற்றி வெப்கேமரா சிக்னலை வைத்தெல்லாம் தான் இருக்கும் கைலாச அவை கண்டுபிடிக்க முடியாது என நித்தியானந்தா தெரிவித்து இருக்கிறார். நித்யானந்தா கைலாசம் எனும் தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த நாள் முதல் பெரும் சர்ச்சை எழுந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தினமும் சமூக வலைத்தளங்களில் நேரலை மூலமாக புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா. கைலாச நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அறிவிப்பாக கைலாச நாட்டிற்கான நாணயங்கள் மற்றும் பணத்தை விநாயகர் சதுர்த்தி தினமான சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து கைலாச நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிறுவனர் குமார் என்பவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கிய 3 மணி நேரத்தில் நேரலையில் தோன்றி நித்யானந்தா மதுரை ஹோட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சியை சேர்ந்த சாரதா ஜவுளிக்கடை அதிபர் ஆகியோர் தங்களது தொழில்களை கையில் தொடங்க முன்னுரிமை அளிக்க சந்நியாசிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது நாட்டு பொருளாதார வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தான் இறந்த பிறகு தனது சொத்தை மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அளிக்க உயில் எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சொத்துக்கு ஆசைப்பட்டு தான் மதுரை ஆதீனத்திற்கு வரவில்லை என்றும் மீனாட்சி அம்மன் வாழ்ந்த மதுரையில் உயிர் வளர்க்க வேண்டும் என்பதால் தான் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்க்காரர்கள் தான் உயிரோடு இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா வைத்து தரிசனம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். சிசிடிவி சிக்னலை வைத்து கண்டுபிடிக்கலாம் என முயற்சிக்க வேண்டாம். இப்படி கண்டுபிடிக்க இயலாது.

தான் உயிர் இழந்த பின் தனது உடலை திருவண்ணாமலை மலையையும், மீனாட்சி அம்மன் கோவிலையும் சுற்றிக் கொண்டு வந்த பிறகே புதைக்க வேண்டு.ம் கைலாச நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் நிச்சயமாக தொழில் துவங்க வேண்டுகோள் விடுத்த அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *