வரலட்சுமி சரத்குமாரின் இன்னொரு முகம் என்ன தெரியுமா?
வரலட்சுமி சரத்குமார் போடா போடி படத்தில் நாட்டிய கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் திரை பின்னணி உடையவர்.
முன்னணி கதாநாயகனும் திரையுலக அரசியல்வாதியுமான சரத்குமார் மற்றும் முன்னணி கதாநாயகியும் சின்னத்திரை ராணியுமான ராதிகா சரத்குமார் இவர்கள் நடத்தும் ரடான் புரோடக்சன் என வரலட்சுமி சரத் குமாரின் பின்னணி திடமானது.
தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தாரை தப்பட்டையில் கரகாட்ட கலைஞராக இவரின் நடிப்பு வரவேற்கப்பட்டது. இயக்குனர் பாலாவின் படம் என்றால் சும்மாவா! இந்த கதாபாத்திரத்துக்கு பிறகு மலையாளத்தில் மம்முட்டி அவர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தின் வில்லியாக கலக்கினார்.
தவறவிட்ட வாய்ப்புக்கள்
சூப்பர் டூப்பர் ஹிட் படமான பாய்ஸ் படத்திற்கு கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலட்சுமி சரத்குமார் தன் தந்தை வேண்டுகோளுக்கு இணங்க வாய்ப்பை நிராகரித்து விட்டார். இந்தப் பட்டியலில் பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படமும் வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படமும் அடங்கும்.
அறியாத முகம்
வரலட்சுமி சரத்குமாருக்கு சிறுவயது முதலே பேக்கிங் பணி பிடித்தமான ஒன்றாகும். இந்தியாவில் அறிவியல் பட்டப் படிப்பு வெளிநாட்டில் முதுகலை பட்டம் பெற்ற இவர் இந்த கொடுமையான தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வீட்டிலிருந்தபடியே பேக்கரி நடத்தி வருகிறார்.
கொரோனா ஊரடங்கில் நட்சத்திரங்கள் பலர் உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபட சிலர் சமையல்கட்டில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் சமையல் கட்டையில் பொழுதுபோக்காக ஈடுபடாமல் தொழிலாக மாற்றியவர் வரலட்சுமி சரத்குமார்.
தன் சிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றுவதற்காக பேக்கரி ஒன்றை லைப் ஆஃப் பை என்ற பெயர் சூட்டி துவங்கியுள்ளார். ஹாப்பி யாக துவங்கிய இந்தப் பணி ஒரு சிறு தொழிலாக மாறியுள்ளது.
லைஃப் ஆஃப் பையின் பேக்கரி பதார்த்தமான சீஸ் டார்ட்ஸ் 100 ஆர்டர்களை பெற்று வரவேற்கப்பட்டுள்ளது. வரலட்சுமி சரத்குமார் இத்தகைய வரவேற்ப்பை எதிர்பார்க்கவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர்
வரு சரத் என்ற ட்விட்டர் அக்கவுண்டில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். நேற்று 1 ஜூலை 2020 உலக மருத்துவர்கள் தினத்தை ஒட்டி அனைத்து மருத்துவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திரையுலகில் இருக்கும் நாங்கள் ஹீரோ ஹீரோயின்கள் அல்ல தற்போது இருக்கும் சூழ்நிலையில் மருத்துவர்கள்தான் உண்மையான ஹீரோ ஹீரோயின்கள் என காணொளி மூலம் கூறுகிறார்.
இந்தக் கொரோணா பலருக்கு பல முகத்தை காட்டுகிறது.