அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன்.. சிறப்பம்சங்கள் கொண்ட தலைவர்கள் பயணிக்க தனி விமானம்!
அதிநவீன வசதிகளுடன் கூடிய ஏர் இந்தியா ஒன் விமானத்தை போயிங் நிறுவனத்திடம் இருந்து 8400 கோடி ரூபாய் செலவில் இந்தியா வாங்கி இருக்கிறது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பயணிக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய விமானம் டெல்லி வந்தடைந்தது.
ஏர் போர்ஸ் விமானத்தில்
ஏர் போர்ஸ் விமானத்தில் கூட்ட அரங்கு, படுக்கையறை, சமையலறை, ரகசிய பாதுகாப்பு அறை, விருந்தினர்களுக்கான பகுதி, விளையாட்டு அரங்கு ஆகியவை இருக்கின்றன. மருத்துவ சிகிச்சை செய்து கொள்வதற்கு தனி அறை இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு விருந்தினர்களுடன் விவாதிப்பதற்கான அறைகளும் இடம் பிடித்திருக்கின்றது.
தொலைபேசி, கணினி, இணையம் என சகல தகவல் தொடர்பு வசதி களையும் அடக்கியது. ஏர் போர்ஸ் 1 இந்திய பிரதமர் பயணிக்கும் ஏர் இந்தியா ஒன் விமானத்திலும் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள் இடம் பெற்றுள்ளன, ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் ஏர் இந்தியா ஒன்னுக்கு இருக்கிறது. 10,000 கிலோ மீட்டர் தூரம் வரை ஏர் போர்ஸ் விமானம் பறக்கும்.
அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் விமானம்
இதற்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பபட்டால் போதும், அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் விமானம் பறக்கும். நடுவானில் எரிபொருள் நிரப்ப முடியும். அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் விமானம் மணிக்கு 630 மையில் முதல் 700 மைல் வேகத்தில் 45100 அடி உயரத்தில் பறக்கும் என்றால், இந்திய பிரதமரின் ஏர் இந்தியா விமானம் மணிக்கு 560 மைல் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
தொடர்ந்து 17 மணி நேரம் வரை எங்கும் இடம் நில்லாமல் பறக்கக் கூடியது. இந்தியாவிலிருந்து புறப்பட்டால் எங்கும் நிற்காமல் நேரடியாக அமெரிக்காவுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிரிகளின் அலைவரிசையை முடக்குவதற்கான நவீன வசதிகளும், ஏர் இந்தியா ஒன் விமானத்தில் இடம் பெற்றுள்ளன.
ஏர் போர்ஸ் பாதுகாப்பு அம்சங்கள்
அதிநவீன மின்னணு போர் கருவிகள் கொண்ட அறைகள் இருக்கின்றன. வானில் தாக்குதல் நடத்த வரும் விமானத்தை எளிதாக எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதுடன், தாக்குதலையும் தடுத்து நிறுத்த முடியும். பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம் பிடித்திருக்கிறது.
போயிங் விசி 25 ஏ என்ற வகையைச் சேர்ந்த ஏர் போர்ஸ் ஒன் மூன்று அடுக்குகளாக வடிவமைக்கப்பட்ட விமானம் முன்னதாக இரு விமானங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் விமானம் வெளிவந்த அடைந்துள்ளது.
அதி நவீன தகவல் தொடர்பு பாதுகாப்பு வசதிகள் இதன் சிறப்பம்சங்களாகும். அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தைப் போன்று இவ்விமானமும் வடிவமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.