செய்திகள்தேசியம்

பிரதமரின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து கொண்டாடும் நெட்டிசன்கள்

நாட்டின் 64வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இதில் பிரதமர் மோடி பெண்களின் முன்னேற்றத்தினை குறித்து அரசாங்கத்தின் முயற்சிகள் என்ன என்று பேசினார்.

தனது தலைமையிலான அரசாங்கம் எப்போதும் இந்தியாவின் ஏழை மகள்கள், சகோதரிகளில் உடல் நலம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. இதனால் 6,000 ஜன அவுஷதி மக்கள் மருந்தகம் மையங்கள் மூலமாக சுமார் 5 கோடி பெண்களுக்கு ஒரு ரூபாய் விலையில் சானிட்டரி பேட்களை பெற்றுள்ளார்கள்.

பெண்களுக்கான சரியான திருமண வயதை திருமணத்திற்காக ஒரு குழுவையும் பணியில் அமர்த்தி உள்ளதாக குறிப்பிட்டார். அந்த குழுவின் அறிக்கையை பொறுத்து பெண்களின் திருமண வயது குறித்து முடிவு எடுக்கப்படும். பெண்கள் எதிர்கொள்ளும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான சிக்கல்களை இந்தக் குழு தீர்வு கொடுப்பதற்காக செயல்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் பெண்கள் குறித்து பேசியது ஒரு ரூபாய் சானிட்டரி பேட் குறித்து இப்போது நெட்டிசன்கள் பிரதமரின் உரையை கொண்டாடித் தீர்த்து வருகின்றது. கடற்படை மற்றும் விமானப் படை பிரிவுகளில் பெண்களிடம் யுத்தம் செய்யவும் அனுமதிக்கப்படுவதாகவும், நாங்கள் முத்தலாக்கையும் அளித்துள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து கொண்டாடும் நெட்டிசன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *