வாய்திறந்த சோனுசூட் தொங்கி கிழியும் பாலிவுட்
பாலிவுட்டை சுஷாந்த் மரணம் சுக்கு நகாரணமாகப் பிஸியாக இருந்த நடிகர் சோனு சூட் அவர்கள் தற்போதைய மரணம்குறித்து பேசியுள்ளார். அது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கொரோனா தொடங்கியதிலிருந்து மிகச் சிறப்பாகப் பொது பணியாற்றிவரும் நடிகர் சோனு சூட் அவர்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் பாராட்டைப் பெற்று வருகின்றார். அவர் சமீபத்தில் ஒரு வயதான மூதாட்டி சிலம்பம் வித்தை தெருவில் காட்டி சம்பாதிப்பதை பார்த்துத் தெருவில் திறன் காட்டும் சம்பாதித்து உண்பதை எண்ணி, தயவுசெய்து இவரை எனக்குக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கேட்டிருந்தார். இவரைப் போன்றவர்கள் பயிற்சிக்குத் தேவை என்று கூறியிருந்தார்.
தற்பொழுதைய நிலையில் சுஷாந் இறப்புக்கு பின்பு பாலிவுட் எல்லாம் நெப்போட்டிசம் பரவி வருகின்றது. தற்போது இதுகுறித்து சோனு சூட் அவர்களும் வாய் திறந்துள்ளார். அதில் அவர் தெரிவித்த கருத்து “உங்களது உடலின் உள்ள நரம்புகள் எஃகு போல் உறுதியாக இருப்பின் களத்தில் இறங்குங்கள், அதிசயங்கள் எல்லாம் தானாக நடக்கும் என்ற கனவினை காண முயலாதீர்கள், சிக்ஸ்பேக் உடல் வலி இருப்பதால் மட்டும் வாய்ப்புகள் வருவதில்லை,” என்ற கருத்தினை நடிகர் சோனு சூட் அவர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இதனிடையே பாலிவுட்டில் நெப்போட்டிசம் நட்சத்திரங்களின் வாரிசுகள் தான் முன்னுரிமை என்பது கிடைக்கின்றது. அவர்களுக்குத்தான் வாய்ப்பு என்பது சாதகமாக இருக்கின்றது என்ற தகவலும் உறுதியாகியுள்ளது. ஆனால் இதற்குப் பின் இருப்பவர்கள் யார் ஒரு நட்சத்திரத்தின் மகனோ, மகளோ வெற்றி பெறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் யார், அந்த நட்சத்திரத்தின் பெரிய நட்சத்திர பலம் மட்டும் தானா, இல்லை அதற்கு அப்பாற்பட்ட அப்பாவி மக்களின் அப்பாவி தனம்தானா, ரஜினியின் பிள்ளை ரஜினிபோல் நடிப்பார் என்று நம்பி மக்கள் வாய்ப்பு தருகின்றனர்.
மக்கள் நட்சத்திரத்தின் பிள்ளைகள் நட்சத்திரத்தைப் போல் நடிப்பார்கள் என அவர்களுக்கு வாய்ப்பு தருகின்றனர். இதற்குப் பின்னர் நாம் யோசிக்க வேண்டியது என்னவென்றால், மக்கள்தான் என்னடா இது அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில, மக்களை குறை சொல்கிறார்களே என்று யோசிக்க வேண்டாம்.
புது நடிகர்கள் படம் வரும்பொழுது அதற்கு ஜோஸ் குறைவதற்கு காரணம் என்ன ஒன்று புது நடிகர்கள் படம் நல்ல படமாக இருந்தாலும் ஓடுவதில்லை. மற்றொன்று வரும்போது அந்த படத்திற்கான பெரும் வரவேற்பினை மக்கள் தர தயங்குகின்றனர். அவர்களுக்கு இந்த விழிப்பு நிலை தெளிவாக இருந்தால் திறமை இருப்பவர்களுக்கு என்றும் தளங்கள் சரியாக அமையும்.
சினிமா என்றால் என்ன என்ற விழிப்புணர்வு நமது மக்களுக்கு இருக்க வேண்டும். மக்களைச் சுயமாகச் சிந்திக்க அனுமதிக்க வேண்டும். நாட்டில் கல்வி அரசியல் சினிமா இந்த மூன்றும் வாரிசுகளின் பலத்தாலும், வணிகர்களின் மூளைத்திறனாளும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு திசைமாறி செல்கின்றது. இப்படி இருக்க சினிமா வாரிசை மட்டும் நாம் குறைகூறிக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் பலதுறைகளில் வாரிசுகளின் கொடிகள் தான் கோலோச்சி நிற்கின்றது. இது சரியாகச் சாமானியனுக்கு புரிந்தாலே போதுமானதாகும் திறன் இருப்பவர்கள் எல்லாம் சரியாக இயங்க முடியும்.