நுழைவுதேர்வுகுக்கு தயாராகுங்க மாணவர்களே !.
தமிழகத்தில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் நீட் சிக்கல்களுக்கு இடையில் மீண்டும் முக்கிய பங்கு பெறுகின்றது. தேசிய தேர்வு முகமை நடப்பு ஆண்டுக்கான நீட், ஜே,இ,இ நுழைவுத் தேர்வுக்கு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் தேசிய உயர்கல்வி ஐஐடி, என்ஐடி, ஐ.ஐ.ஐ.டி போன்ற பாடங்களில் பொறியியல் மற்றும் பட்ட படிப்புக்காக தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றது.
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தேர்வில் பங்கு பெற விண்ணப்பிக்கப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பு என்ற வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதல்நிலை பட்டப்படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் கியூட் தேர்வு எழுத வேண்டியது அவசியமாக இருக்கின்றது. இந்த ஆண்டு நுழைவுத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கு தேதிகளை அறிவித்துள்ளது.
ஜேஇஇ தேர்வுகளுக்கான அட்டவணையின் படி ஜனவரி 24 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்வானது மேலும் ஏப்ரல் ஆறு முதல் 12 ஆம் தேதி வரை ஜேஇஇ தேர்வானது இரண்டாம் கட்ட தேர்வுகளை நடத்துகின்றது.
மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக நீட் தொலைவு நுழைவு தேர்வு மே மாதம் ஏழாம் தேதி நடத்தப்படுகின்றது. தேர்வில் பங்கேற்க பெரும்பாலான மாணவர்கள் நாடு முழுவதும் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகின்றது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் கியூட் தேர்வானது மே 21 முதல் 31 வரை நடைபெறுகின்றது
நாடு முழுவதும் லட்சக்கணக்கில் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்கள் அட்டவணையை வைத்து திட்டமிட்டு படிக்க வேண்டும் . அப்பொழுதுதான் அவரவர் இலக்கை எளிதில் அடைய முடியும்.