ஆரோக்கியம்வாழ்க்கை முறை

இத பாருங்க ஃபஸ்ட்..!!

நாம் பல பேர் பல வேலைகளில் ஈடுபடுவதால் நாம் நம்மை நம் உடல் அமைப்பு வளைவுகளை கவனித்து இருப்போமா. உங்கள் உடலை எப்படி வைத்துக் கொள்கிறீர்கள். உட்காரும் போதோ, நிற்கும்போதோ, அல்லது உறங்கும் போதோ, உங்கள் உடல் எப்படி இருக்கிறது. என்பதைத் தான் நாம் உடல் தோரணைகள் என்று கூறுகிறோம்.

தினசரி செய்யும் செயல்களை சரியான தோரணையில் தான் செய்கிறோமா என்பது முக்கியம். இதை ஒவ்வொருவரும் நாம் கவனித்து நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். குறைந்த மன அழுத்தத்துடன் தினசரி செயல்பாடுகளை செய்ய சரியான தோரணையை பயன்படுத்த வேண்டும். கனமான பையை தூக்கி செல்கிறோம் என்றால், பொருளைப் பிரித்து இரண்டு பைகளில் வைத்து எடுத்துச் செல்லலாம்.

இதனால் உடலின் இருபுறமும் சமமாக இருக்கும். முதுகில் மாற்றிக்கொள்ளும் பைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஏனெனில் அவற்றை பயன்படுத்தினால் இரண்டு தோள்களும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. தரையிலிருந்து எதையேனும் எடுக்க குனிய வேண்டி இருந்தால் முதுகை நேராக வைத்துக்கொண்டு கால் மூட்டுகளை வளைத்து எடுக்க வேண்டும்.

கோபம், பயம் போன்ற உணர்வுகளுக்கு மன அழுத்தம் உடலின் இறுக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் இசை கேட்பது, நடனமாடுவது போன்ற மன அழுத்தத்தை குறைக்கும். விஷயங்களில் மனதைச் செலுத்த வேண்டும். யோகாசனங்கள் உடலின் தசை இறுக்கத்தை நீக்கி, மனதை அமைதி படுத்த உதவுகிறது.

பால் பொருட்கள், கொழுப்பு நிறைந்த மீன்கள், போன்ற சத்துள்ள உணவுகள் உடலுக்கு அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உட்கார்ந்து இருக்கும் போது தலையை நிமிர்ந்து பார்த்தபடி தாடையை திடமாக முன்னோக்கி வைத்தபடியும் தோள்கள் பின்னோக்கியும் மார்பு முன்னோக்கியும் வயிறு இறங்கிய படியும் நிறுத்த வேண்டும்.

இது உங்கள் சம நிலையை மேம்படுத்தும். ஹை ஹீல்ஸ் அது ஒருபுறம் சாய்ந்தபடி இருப்பது நீண்ட நேரம் நிற்பதை இது போன்ற வேலைகளை செய்வதால் முதுகு பாதிக்கும். உட்காரும் போது பாக்கெட்டின் பின்பக்கத்தில் கனமான பர்சை வைத்திருக்க வேண்டாம். அது இடுப்பின் சமநிலையை பாதிக்கக் கூடும்.

கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துபவர்கள். அதிகமான முன்னோக்கி வளைந்து இருப்பதை தவிர்க்கவும். உயரம் கொண்ட இருக்கையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டாம். கால்களின் பின் பகுதியில் ஏற்படும் அழுத்தங்களை தவிர்க்க தலையை வைத்துக் கொள்ள ஒரு மேடை போன்ற அமைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூடுமானவரை அவ்வப்போது எழுந்து நின்று கை, கால்களை நீட்டி மடக்க வேண்டும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, சற்று தூரம் நடந்து விட்டு வரலாம். அதிக பேசுபவர் என்றார் தோள்பட்டையில் வைத்து பேசுவதற்கு பதிலாக ஹெட்போன் உபயோகிக்கலாம்.

தவறான தோரணையால் செரிமான பிரச்சனை, முதுகு நரம்பு வலி, முதுகு வலி ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அடிமை தாங்கக் கூடிய வகையில் உள்ள நாற்காலியை பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் மேஜைக்கு உங்கள் கை மூட்டின் உயரத்திலேயே இருக்க வேண்டும். நாற்காலியை மேஜைக்கு நேராக தான் வைத்திருக்க வேண்டும். முதுகை தாங்கும் வகையில் சிறிய தலையணையை வைத்துக் கொள்ள வேண்டும்.

முதுகு வளைந்த படி உட்காருதல், ஒரு காதில் மொபைல் போனை வைத்து தலையை சாய்த்து பேசுவதும், முன்னோக்கி வளைந்து உட்கார்ந்து கொள்ளுதல், தவறான உடல் தோரணை எடுத்துக்காட்டுகள். இதனால் தசைகளிலும், முதுகுத்தண்டின் திசுக்களிலும், முதுகுத் தசைகளும், இடுப்பு தோள், கழுத்து மற்றும் வயிற்று சுவரிலும் இருக்கம் அதிகமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *