நயன்தாராவால் விக்கிக்கு அடித்த பெரிய லாட்டரி…
இந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகள் வலம் வரும் நடிகை நயன்தாராவும் லால்குடி சேர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதல் மொட்டுகளாய் இருந்தனர். அந்த காதல் மட்டும் திருமண மலராக கடந்த மாதம் பிரம்மாண்டமாக மலர்ந்தது. மகாபலிபுரத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளின் ஆசிர்வாதத்தோடு ரசிகர்களின் அன்போடும் மக்களின் ஆதரவோடும் மிக பிரம்மாண்டமாக நயன்தாரா விக்கியின் திருமணம் இனிதே நடைபெற்றது.
அவர்கள் இருவரின் திருமணம் என்றும் மனதில் நிற்கும் அளவு ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கலாச்சாரத்தோடும் அவர்களின் காதலின் நினைவுகளோடும் ஆடைகளிலேயே அவர்களின் காதல் கதையை அனைவருக்கும் வெளிப்படுத்தும் விதத்தில் அனைத்தும் மிக சிறப்பாக மலரும் நினைவாக இருந்தது. அவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு தங்களின் தேன் நிலவை தாய்லாந்துக்கு சென்று கொண்டாடினர். அவர்களின் அன்பை அங்கிருந்து ரசிகர்கள் அனைவருக்கும் புகைப்படங்கள் மூலமாக அழகாக வெளிப்படுத்தினர்.

இந்த வயதில் திருமணமா என்று விமர்சித்த அனைவரின் முகத்திலும் கரியை பூசும் அளவிற்கு எந்த வயதில் திருமணம் செய்தாலும் அன்போடும் காதலோடும் மிக சந்தோஷத்தோடு இனிமையாக திருமண வாழ்வை வாழ முடியும் என்று அவர்கள் இவ்வுலகிற்கு தங்களின் காதலின் ஆழத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

இவ்வாறு அனைவரின் அன்போடும் நடந்த திருமணத்திற்கு பிறகு அவர்களின் திருமண வாழ்வும் மன வாழ்வும் மட்டுமே பொருளாதார ரீதியாகவும் அவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருமணம் முடிந்து தாய்லாந்துருக்கு சென்று தேனிலவை கொண்டாடிவிட்டு நாடு திரும்பிய விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவை கரம்பிடித்ததின் பரிசாக மிகப்பெரிய அதிர்ஷ்டம் வந்துள்ளது. அது என்ன என்றால் அடுத்த மாதம் மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் வெளிப்பாடாக ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர். விக்னேஷ் இவனுக்கு தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
