நவராத்திரி ஸ்பெஷல் தித்திக்கும் சர்க்கரை பொங்கல்
- தானிய வகைகள் குதிரைவாலி, வரகு, சாமை அரிசியிலும் பிரசாதம் செய்து படைக்கலாம்.
- நவராத்திரி ஸ்பெஷல் நைவேத்தியம்.
- நவராத்திரி மூன்றாம் நாள் இன்று வாராஹியை வழிபட வேண்டும்.
வரகு, சாமை சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்
வரகு, சாமை அரிசி ஒரு டம்ளர், குருணை பச்சரிசி அரை டம்ளர், அரை தம்ளர் பாசிப்பருப்பு, வெல்லம் 350 கிராம், ஏலக்காய் 5 பொடி செய்து கொள்ளவும், முந்திரி 10, நெய் 50, தண்ணீர் தேவையான அளவு, சிறிது உப்பு.
செய்முறை விளக்கம்
குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பு, பச்சரிசி கழுவி சிறிது நேரம் ஊற வைத்து ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் வைத்து நான்கு விசில் விட்டு இறக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, கிஸ்மிஸ் பழம், ஏலக்காய் தாளித்து எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
குக்கர் விசில் அடங்கியதும், காய்ச்சிய பாகு, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து கிளறி எடுத்தால் தித்திக்கும் சர்க்கரை பொங்கல் தயார்.