தேசிய கல்விக் கொள்கையை வகுத்த மத்திய கல்வி அமைச்சகம்
மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி பை கொள்கையை தற்போது வகுத்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை மையமாகக் கொண்டு வகுத்துள்ளன. ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும், புத்தகப் பையின் எடையை சீராக கண்காணிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
- பையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது.
- பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய வசதிகள்.
பள்ளி நிர்வாகத்தின் கடமை
பள்ளிக்கு கொண்டு செல்லும் பையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த அளவை குறைப்பதற்கு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் எளிதாக அணுகக்கூடிய அளவில் நல்ல தரமான குடிநீரை வழங்க பள்ளி நிர்வாகத்தின் கடமை பொறுப்பாகும். என்று பள்ளி புத்தகப்பை கொள்கை கூறுகின்றது.
கட்டாய வசதிகள்
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மதிய உணவு பாக்ஸ் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல மாட்டார்கள் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் வகுப்பு பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய வசதிகள், மதிய உணவு போன்றவை போதுமானதாகவும், நல்ல தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.
மாணவரின் எடையில் பத்து சதவீதம்
குழந்தைகள் மதிய உணவு எடுத்துச் செல்லமாட்டார்கள் என யோசனை தெரிவிக்கப்பட்டன. அதிகபட்ச எடை மாணவரின் எடையில் பத்து சதவீதம் மட்டும் தான் இருக்க வேண்டும்.
பள்ளிகளில் லாக்கர்கள், பையின் எடையை சரிபார்க்க டிஜிட்டல் எடை இயந்திரம் இருத்தல் அவசியம். மாணவர்கள் சக்கர கேரியர் அல்லது டிராலி பேக் கொண்டுவருவதை நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளன.