சினிமா

காலமான எஸ். நடராஜசிவம் யார் தெரியுமா?

உயிரிழப்பு வந்தாலே கொரோனாவை குற்றச்சாட்டு செய்யும் மனநிலைக்கு மக்களை தள்ளியுள்ள இந்த பரிதாபமான நிலையில் பிரபலமான ஒருவர் இயற்கை எய்தியுள்ளார்.

இலங்கையை சார்ந்த மூத்த வானொலி தொகுப்பாளர் திரையுலக நாயகனுமான எஸ்.நடராஜசிவம் காலமானார்.

எஸ்.நடராஜசிவம்

21 ஏப்ரல் 1946யில் பிறந்த இவர் தன்னுடைய 20ஆவது வயதில் ஊடக உலகில் நுழைந்தார். இவர் வைத்த முதல் அடி இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் சிலோன் வானொலியில் தொகுப்பாளராக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 1980 யில் இலங்கை திரை உலகில் தடம் பதித்தார்.

சிங்கள நாடகமான ‘லாஹிரு தகசக்’ மூலம் 1985ல் நாடக உலகத்திற்குள் நுழைந்தார். யசோராவய, அவசந்த, வனஸபந்து, யுக விலக்துவ ஆகிய சிங்கள குறிப்பிடத்தக்கவை. ‘மீண்டும் மீண்டும் நான்’ என்ற நாடகத்தின் மூலம் உலகப் பிரசித்தி பெற்றார்.

இலங்கையில் தமிழ் படங்களிலும் சிங்களப் படங்களிலும் நடித்தவர் இருமொழிகளிலும் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.

2020யில் தன்னுடைய 74வது வயதில் உடல் நல குறைவால் எஸ்.நடராஜசிவம் காலமானார். திரையுலகில் இவரின் நெருங்கிய நண்பர்கள் சமூக வலைதளங்களில் மன வலியை பகிர்ந்துள்ளனர்.

சமூக வலைத்தளம்

எஸ்.நடராஜசிவம் நெருங்கிய நண்பரான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி குரல் பிரபலமான அப்துல் ஹமீது ஃபேஸ்புக்கில் வேதனையுடன் பதிவிட்ட வரிகள் இதோ.

“என் ஆருயிர் தோழனை இழந்தேன்……..
‘சிறுவர்மலர்’ காலத்திலிருந்து ஊடகத்துறையில் ஒன்றாகவே பயணித்தோம். இளமையில் நடராஜசிவத்தையும் தன்பிள்ளைகளுள் ஒருவனாகவே வரித்து எனது அன்னை பாசம் பாராட்டுவார். ஒன்றாகவே உணவருந்துவோம்.

வெற்றிலை போடும் பழக்கம். இளவயதிலேயே நடராஜசிவத்துக்கு உண்டு என்பதால் எனது அன்னை அன்போடு உரலில் இடித்துத் தரும் வெற்றிலையை ஆசை ஆசையாயச் சுவைத்து உண்டபின், எனது அன்னையின் சேலையைப் போர்த்திக்கொண்டு இருவருமே ஒன்றாக உறங்குவோம். ‘இளைஞர் மன்றம்’ நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே கலந்து கொள்வோம், சன்மானம் பெறும் வானொலிக் கலைஞர்களாக இருவரும் ஒன்றாகவே தெரிவானோம்.

அறிவிப்பாளர் தேர்வுக்கும் ஒன்றாகவே சென்று தெரிவானோம். வாரந்தோறும், நமக்குக் கிடைத்த ஊதியத்தையெல்லாம் போட்டிபோட்டுச் செலவழித்து கொழும்பின் பிரபல உணவங்களையெல்லாம் தேடிச்சென்று விதவிதமான உணவுவகைகளை உண்டு மகிழ்வோம். காலம் நம் இருவரையும் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் சென்றது.

இந்து கலாசார அமைச்சு நம் இருவருக்குமே ‘கலையரசு’ எனும் ‘வாழ்நாள் சாதனை விருது’ வழங்கியபோதுதான் கடைசியாக சந்தித்தோம்.
6 தசாப்தங்களின் பின் இன்று நிரந்தரமாகவே அவன் பிரிந்த சோகச்செய்தி சற்றுமுன்னர் பேரிடியாய் வந்து சேர்ந்தது.
நண்பனே… நண்பனே… எனது உயிர் நண்பனே! என்னிலும் இரண்டாண்டுகள் மூத்தவன் என்பதால் என்னை முந்திச் சென்றாயோ…….”

எஸ்.நடராஜசிவம் ஆன்மா சாந்தி அடையட்டும். கலைஞருக்கு இறப்பு உண்டு அவர் கலைக்கு கொடுத்த பங்கு அனைவரின் நினைவிலும் என்றும் அழியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *