நாகப் பஞ்சமி கொண்டாடும் பெண்கள்!
இன்றும் நாளையும் ஆடிப்பூரத் விழாவுடன் நாகபஞ்சமி மற்றும் கருட பஞ்சமி ஆகிய இரண்டு விழாக்களும் பெண்கள் பூஜிக்க வேண்டிய முக்கியமானதாக கருதப்படுகின்றது. வீட்டில் அமைதி நிலவ ஒற்றுமை பெருக சொத்துப் பிரச்சினைகள் தீர கடன் தொல்லைகள் திருமணம் கைகூட ஆகிய அனைத்து நன்மைகள் பெற தோஷங்கள் தீர நாக பஞ்சமி வழிபாடானது என்று தமிழ்நாட்டில் பல்வேறு வீடுகளில் பின்பற்றப்படுகின்றது.
காலை எழுந்து குளித்து விரதமிருந்து அம்மன் பிறந்த தினமான ஆடிப்பூர வெள்ளியு கிழமையுடன் இணைந்து கூல் காட்சி வேப்பிலை தோரணம் கட்டி பூஜை நடத்தி வழிபாடு நடத்துவது வழக்கம் இன்றைய காலகட்டத்தில் கொரோனா தொடர்பான நோய் தொற்று காரணமாகப் பலர் வீட்டிலே பூஜை செய்து அம்மனுக்கு வீட்டிலே அபிஷேகம் செய்த வழிபாடு செய்த வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
கொரோனா சூழலின் அனைவரும் ஒன்றுகூடிப் பிரார்த்தனை நடத்துவது இயலாத காரணம் என்பதால் அவரவர் வீட்டில் ஆடிப்பூர திருவிழாவானது அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆடிபூர திருவிழாவுடன் இணைந்து இன்று நாக பஞ்சமி சேர்ந்து வருகின்றது வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த நாக பஞ்சமி பெரும் நன்மை தரும் ஒரு நாள் ஆகும். இந்நாளில் நாகர் படம் வீட்டில் வரைந்து பால் பழம் வைத்துப் பூஜை செய்து வணங்கிவர தோஷங்கள் அகலும் தடைபட்ட திருமணங்கள் கைகூடும் வாழ்வில் வளம் பெறலாம்.
இன்று காலையும் மாலையும் பூஜை செய்து வேண்டிய வரங்கள் பெரும் வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாகபஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ள பெண்கள் காலையில் குளித்து விரதம் இருந்து பூஜை செய்துவர உகந்த நாளாக இன்றைய நாள் கருதப்படுகின்றது. வீட்டில் அரிசிமாவில் நாகர் படம் மனையில் வரைந்து, சந்தனம் குங்குமம் வைத்து, அதற்கு பூசாற்றி பால் வைத்து பழங்கள் வைத்து வணங்கிவர பெண்களுக்கு ஏற்படும் தோஷங்கள் விலகும். விரைவில் திருமணம் கைகூடும் வீட்டில் செல்வ வளம் பெருகும் குடும்ப ஒற்றுமை பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலை வாய்ப்பு கிடைக்க பெறலாம்.
வேண்டிய தேவைகள் அனைத்தும் இன்றைய வெள்ளிக்கிழமை பூஜை மூலம் வேண்டி பெறலாம். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் எல்லாம் இன்று பூஜையை மையமாக இருக்கின்றது. கொரோனா தொடர்பான நோய் சிக்கல்கள் இல்லை எனில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் இன்று கோலாகலமான பூஜைகள் பலவண்ண சாதங்கள், பாயசம், இனிப்பு, கஞ்சி கலையம் வகைகள் படைத்து அம்மன் தாய்க்கு விழா எடுத்திருப்பார்கள் விரைவில் இந்த இக்கட்டான சூழல் அகன்று மக்கள் சுபிட்சம் பெற அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம் வளமுடன் வாழ்வோம்