திருமணம் பந்தம் சிறக்க இதெல்லாம் செய்யணும்..??
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயப்படுகிறது என்றும் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறோம். ஏன் என்றால் அது ஓர் ஆணும் பெண்ணும் மட்டும் தங்கள் வாழ்க்கையை தொடங்கும் தருணம் மட்டுமல்ல இரு வீட்டார், இரு சொந்தங்கள் என அனைவரும் சேர்ந்து ஓர் உறவாக கொண்டாடும் தருணம் இல்லை இல்லை திருவிழா என்றே சொல்ல வேண்டும்.
புருஷ லக்க்ஷணம்
கணவன் மனைவி இந்த பந்தம் தங்கள் தலைமுறையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் ஓர் அற்புத உறவு. இரு மனங்கள் ஒன்றாக இணைந்து இவ்வுலகில் உயிரை விதைத்து தங்கள் வாழ்க்கை முழுமை அடைய செய்யும் பந்தம். இந்த இடைப்பட்ட காலத்தில் கணவன் மனைவி வாழ்க்கையில் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்.
கணவன் என்பவன் வீட்டின் பொருளாதாரத்திற்காக சம்பாதிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தனக்காக தன்னை மட்டுமே முழுவதுமாக நம்பி தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு வந்து வாழும் மனைவியை கவனித்து கொள்வதே புருஷ லக்க்ஷணம் என்பார்கள். அன்றாட அலுவல் முடிந்து கணவன் வீட்டிற்கு வரும் பொழுது தேவையானவற்றை அதற்க்கு முன்பே செய்து வைத்து கவனித்து கொள்ளும் தூய்மை உள்ளம் கொண்டவளே மனைவி.
உன்னத படைப்பு
மனைவி என்பவள் தன் கனவு லட்சியம் ஆசைகள் அனைத்தும் தனக்குள் வைத்து கொண்டு, பிறந்த வீட்டு பெருமையை காப்பாற்றவும், புகுந்த வீட்டு பெருமையை நிலைநாட்டவும். கருவை வயிற்றில் சுமந்து பத்து மாத தவம் இருந்து குழந்தை ஈன்று மறுபிறவி எடுத்து தன் வாழ்நாள் முழுவதும் கணவன், குழந்தை என்று அவர்களுக்குகாகவே வாழும் ஓர் உன்னத படைப்பு.
பிடித்தது.. பிடிக்காதது..??
கணவன் வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்பவன் என்றால், மனைவி அந்த வீட்டை காக்கும் வல்லமை கொண்டவளாக இருக்கிறாள். கணவன் வேலை வேலை என்று பார்க்காமல் மனைவியை புரிந்து கொண்டு அவளிடம் மனம் விட்டு பேச வேண்டும், அவளுக்கு பிடித்தது பிடிக்காதது எது என்று தெரிந்து கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும். அது மட்டும் இன்றி வீட்டு வேலைகளிலும் அவளுக்கு உதவ வேண்டும் தினமும் செய்ய விட்டாலும் விடுமுறை நாட்களில் செய்து குடுத்து அசத்தலாம்.
ஓர் ஆணிற்கு, தந்தை,மகன்,சகோதரன் என்று மட்டுமே உறவு முறை உள்ளது, ஆனால் தாய்க்கு பின் தாரம் என்ற உன்னதமான உறவு முறை பெண்ணிற்கு மட்டுமே உண்டு அதுவும் மனைவிக்கு மட்டுமே உண்டு அந்த பெருமை.
சிலர் திருமண வாழ்க்கையில் மனைவியை அடக்கி ஆள்வதே திருமண வாழ்வின் வெற்றி என்று தவறாக எண்ணி தங்கள் வாழ்க்கையை நரகமாக்கி கொள்கிறார்கள்.
அனைத்தும் விட்டுவிட்டு தனக்காக வந்த மனைவியிடம் அவள் சொல் பேச்சு நடந்தால் தவறேதும் இல்லை. அதை விடுத்து என் மனைவி தொல்லை தாங்க முடிய வில்லை என்று புலம்புவதை விடுத்து கொஞ்சம் அவருக்காகவும் வாழுங்கள் வாழ்க்கை புரியும். உண்மை என்னவெனில் கணவன் மனைவியிடம் தோற்பதும், மனைவி கணவனிடம் விட்டு கொடுத்து போவதும் தான் வெற்றிகரமான திருமண வாழ்கை.
கணவன் மனைவி அன்புடன் வாழ்வோம் இல்லறத்தை இனிக்க செய்வோம்…!
மேலும் படிக்க
நம் ஆரோக்கியத்தின் ரகசியம் வீட்டு தோட்டத்தில் இருக்கு..!!
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம், ஐஸ்வர்யம் அருள் பெறலாம் வாங்க!!..