ஏ.ஆர்.ரகுமானுக்கே இந்த கதியா ரசிகர்கள் ஆதரவு
ஏ.ஆர்.ரகுமான் இதுவரை அமைதி காத்து இருந்தார். அவர் தற்போது முதல்முறையாகத் தனக்கெதிராக செயல்படும் கும்பல்கள் பற்றித் தெரிவித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
ஏன் என பார்த்தால் அவர் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் சுஷாந்த் சிங்கின் கடைசி படமான தில் பெச்சாரா படத்தினை ஹாட்ஸ்டாரில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அப்போது பாலிவுட்டில் தன்னுடன் இணைந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என ஒரு கும்பல் தவறான கருத்தினை பரப்பி வருகின்றது. இந்த தகவல் எனக்கு கிடைத்தது என தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.ரகுமான் படத்திற்காக இசையமைக்க முகேஷ் சப்ரா, ஏ.ஆர் ரகுமான் அனுகியதாகவும் அப்போது அவர் கூறிய தகவல்கள் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார். முகேஷ் சப்ரா அவர்கள் தெரிவித்த கருத்தின்படி நான்கு பாடல்களை இரண்டு நாட்களில் கொடுத்தார் எனவும் ஆனால் பாலிவுட்டில் பலர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு இசை வாய்ப்பு தர வேண்டாம் எனவும் கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் முக்கேஷ் சோப்ரா தெரிவித்த கருத்தில் பல கதைகள் இது போன்று ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் தெரிவித்து வருவதாக இதனை ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருந்தார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியுற்று ஏ.ஆர்.ரகுமான் ஹேஸ்டாக் போட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர். இவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். சோசியல் மீடியாவில் ஏ.ஆர். ரகுமான் கேஸ்டாக்குகள் பல கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. ஏ.ஆர்.ரகுமான் முதல் இந்தியர் ஆஸ்கார் விருது பெற்றவர்.
இந்தியாவிற்கு பல நல்ல இசையைத் தந்தவர் அவருக்கே இந்தக் கதி என்றால் இன்னும் சாமானியர்கள் பாடலம் திண்டாட்டமாக இருக்கும். ஏ.ஆர்.ரகுமான் பாடல் இசை அமைக்கத் தகுதி படைத்தவர் இல்லை என்றால், வேறு யாரும் தகுதி படைத்தவர் என்ற கருத்துக்கள் எல்லாம் சமூகவலைதளங்களில் சரமாரியாகப் பாய்ந்தவண்ணம் இருக்கின்றது. சுஷாந்த் சிங் மறைவுக்கு பின்பு பாலிவுட்டில் நெப்போட்டிசம் பெருகி வருகின்றது அவர் மறைவிற்குப் பின்பு பாலிவுட்டின் கோரமுகம் அம்பலமாகி வருகிறது. பாலிவுட்டின் வளர்ச்சியில் தென்னிந்திய படைப்புகளும் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.