முந்திரி கொத்து
முந்திரி கொத்து அந்த காலத்தில் மிகவும் ஃபேமஸ். கிராமப் புறங்களில் இந்த முந்திரிகொத்து பண்டிகை காலங்களில் அதிகமாக செய்வார்கள். பச்சைப் பயறு, வெல்லம், மைதா, அரிசி மாவு வைத்து எளிமையாக செய்யக்கூடிய ஒரு பலகாரம். இந்த பலகாரம் புதிதாக சாப்பிடுபவர்களுக்கு பிடிக்கும். மிக எளிமையான முறையில் இதை தயாரிக்கலாம். ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
- முந்திரிகொத்து மிகவும் ஃபேமஸ்.
- கிராமப் புறங்களில் இந்த முந்திரிகொத்து பண்டிகை காலங்களில் அதிகமாக செய்வார்கள்.
- புதிதாக சாப்பிடுபவர்களுக்கு பிடிக்கும்.
முந்திரி கொத்து
தேவையான பொருட்கள்
பச்சை பயறு 150 கிராம், 100 கிராம் வெல்லம், ஏலக்காய் 5, மைதா 50 கிராம், 100 கிராம் பச்சரிசி மாவு, மஞ்சள் தூள் 3 சிட்டிகை, துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் வெள்ளை எள், எண்ணெய், உப்பு, தண்ணீர் தேவைக்கு ஏற்ப. கால் தேக்கரண்டி சுக்குத்தூள்.
செய்முறை விளக்கம்
ஒரு பாத்திரத்தில் மாவுப் பொருட்களை பச்சரிசி மாவு, மைதா, மஞ்சள் தூள் ஒன்றாக கலந்து சிறிது உப்பு போட்டு மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலக்கி வைக்கவும். பச்சை வாசனை போகும் அளவிற்கு பச்சை பயறை வறுத்து இதனுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து, துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன், வெள்ளை எள் சேர்த்து இதனுடன் வெல்லப்பாகு காய்ச்சி ஊற்றி கிளறவும். இவற்றை நெய் தொட்டு உருண்டை பிடித்து வைக்கவும். ஒவ்வொரு 3 உருண்டையையும், கலக்கி வைத்த மாவில் டிப் செய்து எண்ணையை காய வைத்து பொரித்தெடுத்தால் முந்திரிக் கொத்து தயார்.