வாழ்வியல்

நேர்மறை எண்ணங்கள் தரும் ஆற்றல்மிக்க வளர்ச்சி!

வாழ்க்கையில் நாம் சந்திக்காத சவால்கள் என்பது நம்மை வலிமைப் படுத்துவதற்காக இயற்கை வைக்கும் தேர்வு ஆகும். வாழ்க்கை என்னும் பரிட்சையில் நாம் வெற்றிப் பெற இந்த ஊக்குவிப்பு பதிவுகள் உதவும்.

எதிர்மறை எண்ணங்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே நம் பயம், ஆம் நேர்மறை எண்ணங்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே நம் பலம்.

நம்பிக்கை என்ற பெயரில் நீங்கள் எதற்கு சக்தியுற்றுகின்றிர்களோ அதுவே உங்களை ஆக்கிரமித்து ஆட்டுவிக்கிறது, உங்களுக்கு எது தேவை (பயமா அல்லது பலமா ) என நீங்களே தேர்வு செய்யுங்கள்.

மகிழ்ச்சி

நமக்கு மகிழ்ச்சி வேண்டும் என்றால் நம் எண்ணங்கள் மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும், அதற்கு பிறர் நம்மை பற்றி என்ன எண்ணுவார்களோ என்று சிந்திக்காமல் இருக்க வேண்டும்.

யார் எப்படி நினைப்பார்களோ என்ற பயம் தான் இங்கு அனைவரின் மனதிலும் மேலோங்கி உள்ளது ஆனால் உண்மையில் யாரும் பிறரை பற்றி எண்ணிப்பார்ப்பது (சிந்திப்பது) இல்லை என்பதே உண்மை
இனிய காலை வணக்கம்

மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *