சமையல் குறிப்புமருத்துவம்

உடலுக்கு மருந்தாகும் புதினா..!!

பசுமையாக இருப்பவை அனைத்தும் உடலுக்கு நன்மை தருபவை. காய்கரி, கீரைகள் அனைத்தும் நன்மையை தருபவை. அதிலும் ஒரு மருத்துவ மூலிகையாக புதினாவை குறிப்பிடலாம். இதல் பலன்கள் என்னிலடங்காதவை. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புதினாவை பச்சையாகவோ, உலர வைத்தோ எப்படி பயன்படுத்தினாலும் அதன் சத்துக்கள் கிடைக்கும் நமக்கு. புதினாவை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு கலந்து தினமும் இரண்டு வேளை பருகினால் செரிமான குறைவு சரியாகும். கை,கால் மூட்டு வலி குணமாகும். காய்ந்த புதினா இலையை தண்ணீரில் கொதிக்க விட்டு வடிகட்டி கால் டம்பளர் கொடுக்க காய்ச்சல் தணியும்.

பொடுகைப் போக்க எளியவழி:

புதினா, பூண்டு, எலுமிச்சை சாறு எடுத்து தலையில் தடவி குளித்தால் பொடுகு மறையும். காக்ஸ் 1 , காக்ஸ் 2 , இருவகையான என்சைம்களும் வலி மற்றும் அலர்ஜியை உண்டாக்குபவை. இதை கட்டுப்படுத்தும் ரோஸ்மரினிக் அமிலம் புதினாவின் உள்ளது. ஈசனோபில் என்ற அல்ரஜியை தூண்டும் ரத்த செல்களை கட்டுப்படுத்துகிறது புதினா. அல்ரஜியால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் புதினா.

புதினா, பேரீட்சை, சீரகம், மிளகு, இந்துப்பு, உள்ளார் திராட்சை சேர்த்து அரைத்து சாதத்துடன் சாப்பிட காய்ச்சலினால் வரும் வாய் கசப்பு குணமாகும். ருசியை உணரமுடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் இ, பி , ஏ உள்ளதால் இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்தம், வயிற்று வலியை குறைக்கும். தீர்விர வேலையினால் வரும் மன அழுத்தத்தை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

பெப்பர்மிண்ட்

இந்த இலையில் தயாரிக்கும் பெப்பர்மிண்ட் தைலம். காரம் குறைவாக இருக்கும். இதை தலை வலிக்கு தடவலாம். நீரில் கலந்து குடிக்க, வயிற்று வலி,வயிறு மந்தம் நீங்கி நல்ல பசி எடுக்கும். புதினாவை நிழலில் உலர்த்தி பாலில் காய்ச்சி குடிக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்று போக்கு ஏற்படும் சமயம் புதினா துவையல் சாதத்துடன் சாப்பிடலாம். புதினாவை அரைத்து பற்று போட்டால் தசை வலி, நரம்பு வலி,தலை வலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.

சரும பொலிவை அதிகரிக்க:

வறண்ட சருமம், முக பருக்கு இதன் சாறை தடவலாம். சோகை, வாதம், இருமல், நரம்பு தளர்ச்சிக்கு சிறந்த மருந்தாக இருக்கும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும். அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும். வயிற்று புழுக்களை அளிக்கும். மாதவிடாய் பிரச்னை சரியாகும். பசியை தூண்டும். ரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். மலச்சிக்கல் நீங்கும்.

நீர்சத்து , கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்சத்து, புரதம், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, நிக்கோடினிக் ஆசிட், தயாமின், ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளன. புதினாவின் சட்டினி, சாறு என எப்படி பயன்படுத்தினாலும் இதன் சத்து மாறாது என்பது இதன் சிறப்பு.

மேலும் படிக்க

உடலின் நச்சு தன்மையை போக்க பீன்ஸ் சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *