ஐடிப்பணிக்கு ஆள் எடுக்குமாம் மைக்ரோசாப்ட் நிறுவனம்
நாட்டில் இன்றைய நிலவரம் பரபரப்பான இந்த சூழ்நிலையில் நாட்டில் நிலவும் கொரானாவின் சவாலான சூழ்நிலையில் மக்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான விடிவு காலம் என்பது எப்போது என்ற கேள்வி அனைவருக்குள் இருக்கின்றது. இன்றைய நிலையில் மருத்துவமனை உடலில் சிறு பாதிப்பு என்றாலும் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்கின்றது.
அடுத்ததாக கொரானாவின் இலக்கு நாமாக இருப்போமோ என்ற பயம் தோற்றி நின்று பெரும்பாலான மக்களைப் படுத்துகின்றது. இதில் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். ஐடி போன்ற துறைகளில் பெரிய பெரிய திறமையாளர்கள் எல்லாம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பல நிறுவனங்கள் சம்பள குறைப்பு நடந்துள்ளது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு இது ஒரு சாதகமான நிலை எனலாம். புதிதாக ஊழியர்களை பணியமர்த்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் டிஜிட்டல் மயமாக்கல் திகழ்வதாக இந்த துறையில் முதலீடு செய்ய பலர் முன்வந்துள்ளனர். இதனால் பணியானது இன்னும் அதிகரிக்கும் இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் மையங்களை உருவாக்க திட்டங்களை கொண்டுள்ளது அதில் முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் மைக்ரோசாப்ட் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி புதிதாக ஊழியர்களை பணியமர்த்தும் திட்டத்தை தொடருவோம் என்றும் பதிலளித்துள்ளார். டிஜிட்டலில் முதலீடு செய்து அதில் லாபம் பார்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்து விரிவுபடுத்தவுள்ளது. இவருடைய பதில்கள் அனைத்தும் சாதகமாக இருக்கின்றது எனலாம்.
டிஜிட்டல் வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு வீட்டிலிருந்து பணிகள் செய்தல் தேவைகள் நிறைவேற்றுதல் ஆகியவற்றின் பெரும் உதவியாக இருந்துள்ளது. இந்த நேரத்தில் ஊழியர்கள் மைக்ரோசாப்டின் பணியமர்த்தல் என்பது ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்படலாம்