செய்திகள்

கொரோனாவுக்கு வந்துவிட்டது மருந்து

ஃபேபிபிராவிர்  (Favipiravir) என்ற ஆன்ட்டி வைரஸ் மருந்தை  கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காகப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது. கொரோனா பாஸிடிவ் தவிர்த்து ஒரு பாஸிட்டிவ்வான நியூஸ் இப்பதான் வந்திருக்கு.

க்லென்மார்க் பார்மெசிட்டிகள்ஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையை செய்துள்ளது. ஃபேபிபிராவிர் என்ற மருந்தை ஃபேபிஃபுளு பெரில் சந்தையில் விடுகிறது இந்த நிறுவனம். இந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற இந்த மருந்து மற்ற நாடுகளிலும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக நாட்டில் அங்கீகாரம் பெற்ற முதல் மருந்து ஃபேபிஃபுளு என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த அறிகுறிகளுடன் இருக்கும் கொரோனா தொற்று உள்ள நோயாளிகளில் ஃபேபிஃபுளுவால் உனக்கு படுத்த முடியும் என இந்த பார்மசூட்டிக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) இந்த த மருந்தை அங்கீகாரம் செய்தாலும் “தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக” என் குறிப்பிட்டுள்ளது. இப் மருந்தை பயன்படுத்தும் நோயாளிகள் தங்கள் ஒப்புதலில் கையெழுத்திட வேண்டும்.

‘மிதமான முதல் நடுத்தர அறிகுறிகள் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து செயல்படும். கொரோனாவின் இறுதிக்கட்ட நோயாளிகளுக்கு மே மாதத்தில் புதிதான மருந்தை உருவாக்கத் தொடங்கியுள்ளோம். இது வைரஸ் எதிர்ப்பு மருந்தான ஃபாவிபிராவிர் மற்றும் உமிஃபெனோவிர் ஆகியவற்றின் கலவையை தனித்தனியாக சோதித்து வருகிறோம்’ என க்லென்மார்க் நிறுவனத்தின் முதலாளி கூறியுள்ளார்.

மேலும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஃபேபிபிராவிர் மருந்துக்கான நேரடி சோதனைக்கு அரசிடம் அனுமதி கிடைத்துள்ளது. முதற்கட்டமாக கொரோனா பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டு லேசான அறிகுறிகளோடு காணப்படுவார்களுக்கு இந்த மருந்தைக் குறிப்பிட்ட அளவில் கொடுத்து சோதனை தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளது.

முதலில் இந்த மருந்தை கொடுக்கபடும் நோயாளிகள் 14 நாட்கள் கண்காணிக்கப் படுவார்கள். இந்தியாவில் பல இடங்களில் இது அமலுக்கு வருகிறது. கொரோனா பரிசோதனை இருக்கும் மருத்துவமனைகளில் இதனை அமல்படுத்துகின்றனர்.

நாட்டிற்கு க்லென்மார்க் பார்மெசிட்டிகள்ஸால் நற்செய்தி வந்தபடி இருக்கையில் பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்திற்கு நல்ல நாளாக அமைந்துள்ளது. நிறுவனத்தின் ஷேர் ₹ 409.35 வெள்ளிக்கிழமை அன்று மூடியது. இன்று ஒரே நாளில் ₹ 573.05 உச்சத்தைத் தொட்டு ₹ 519.75 அளவில் முடிந்துள்ளது.

கொரோனாவிலிருந்து ஒரு வழியாக விடிவு காலம் பிறக்க போகிறது என்று நம்புவோம்.

மேலும் படிக்க:கொரோனாவின் கொடூரப் பிடியில் இந்தியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *