மருத்துவம்

செம்பருத்தி பூவை பயன்படுத்துங்க ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க… !

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் செம்பருத்திப்பூ இருப்பதை பார்க்கிறோம். செம்பருத்திப்பூ அழகிற்காக மட்டுமில்லாமல் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சித்த மருத்துவ நூல்கள் இந்த பூவில் ஏராளமான சத்துக்கள் இருப்பதைக் கூறுகிறது. தங்கபஸ்மத்திற்கு இணையாகவும் செம்பருத்திப்பூவை இந்த நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

மருத்துவம் குணங்கள் நிறைந்துள்ள செம்பருத்திப்பூவை செவ்வரத்தை, செம்பருத்தி, சீன ரோஜா என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். அதிக மருத்துவ குணம் கொண்டது மட்டுமில்லாமல் இதய நோய்களைத் தடுக்கக் கூடியது. செம்பருத்தி பூவிதழ்களை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் , பயன்படுத்தினால் என்னென்ன நோய்கள் குணமாகும் மற்றும் காலை வெறும் வயிற்றில் இதனை பயன்படுத்தி வருவதால் என்னென்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1.இதய நோய்
நான்கைந்து செம்பருத்தி பூவிதழ்களை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள் அதனை கசாயமாக அருந்தி வரலாம். நான்கு ஐந்து செம்பருத்திப் பூக்களின் இதழ்கள் விதை நீக்கப்பட்டு, நெல்லிக்காய் 1, கருவேப்பிலை ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்த்து நீரில் கொதிக்க விட்டு  வடிகட்டி அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். இதய ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும். இதயம் சம்பந்தமான பிரச்சினைகளால் அவஸ்தைப்படுபவர்கள், இதனை பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

2.உடல் சூட்டை குறைக்கும்
அதிக உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்விக்கும் ஆற்றில் இந்த செம்பருத்தி பூ இதழ்களுக்கு உண்டு. அதிக உடல் உஷ்ணத்தினால் வரக்கூடிய வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இது போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் இரண்டு மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மென்று சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

3.பெண்களுக்கு மிகவும் நல்லது செம்பருத்திப்பூ இதழ்கள் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வாக அமைகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய முறையற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, உரிய வயது வந்ததும் பருவம் அடையாத நிலை, வெள்ளைப்படுதல் கருப்பை நீர்க்கட்டிகள் என கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு தீர்வு தரக்கூடியது. செம்பருத்திப்பூ இதழ்கள் இது போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் நான்கு ஐந்து செம்பருத்திப் பூ இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும்.

4.இரத்த சோகை குணமாகும்
இரத்த சோகையினால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உடல் சோர்வு, பசியின்மை எந்த வேலையும் செய்ய நாட்டமின்மை இது போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் செம்பருத்தி பூ இதழ்களை நீர்விட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி அந்த நீரை குடித்து வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதன் மூலமாக ரத்தசோகை குணமாகும்.

5.தலை முடி வளர்ச்சி

அதிகரிக்கும் தலையில் நிறைய முடி உதிர்வு அதிகமாக இருந்தால் 10 முதல் 15 செம்பருத்தி பூ இதழ்களை காயவைத்து 100ml தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி பின் அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வர தலைமுடி உதிர்தல் நீங்கி முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

6.இருமல் குணமாகும்
அதிக சளியினால் உண்டாகக் கூடிய வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது இந்த செம்பருத்திப்பூ இதழ்கள். ஐந்து செம்பருத்திப் பூக்களின் இதழ்கள் இரண்டு அல்லது மூன்று ஆடாதொடை இலையுடன் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து பின் அதை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல் முற்றிலும் குணமாகும்.

7.ரத்த அழுத்தம் குணமாகும்
அதிக மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு காரணமாக பலரும் ரத்த அழுத்தப் பிரச்சினையால் அவதிப்படுவார்கள். அதிக ரத்த அழுத்தம் உடலின் உள்ளுறுப்புகளை மிக விரைவில் பாதிப்படைய செய்து விடும். அதிக இரத்த அழுத்தத்தினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு செம்பருத்திப்பூ ஒரு மருந்தாக இருக்கிறது. செம்பருத்தி பூ இதழ்களை பயன்படுத்தி காலை வெறும் வயிற்றில் அருந்தி வர இதயம் நன்கு சுருங்கி விரிவது இதற்கு பலன் கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல் ரத்த அழுத்தம் சீராகும். அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்கள் காலையில் பால் பயன்படுத்தி செய்யக்கூடிய டீ மற்றும் காபிக்கு பதிலாக செம்பருத்திப்பூ டீ அருந்தி வர ரத்த அழுத்தம் சீராகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *