செய்திகள்தமிழகம்

அட்ரா சக்க மேட்ரிமோனியல் விளம்பரம்.. நீங்களே பாருங்க!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்ற பந்தம் சரியான காலகட்டத்தில் சரியான வயதில் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்ல வேண்டும். வீட்டை கட்டிப் பார், கல்யாணம் செய்துப் பார் என்று முன்னோர்கள் வாக்கு உண்மை தானே. இப்படி இருக்க இன்றைய மணமகள்/மணமகன் பல கனவுகளுடன் வரன்களை தேடுகின்றனர்.

நிதின் சாங்வான் ஐஏஎஸ் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் செய்தித்தாளில் வந்த ஒரு விளம்பரத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் மணமகள்/மணமகன் கவனிக்க வேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மேட்சிங் விதிமுறைகளும் மாறிவிட்டன.

மேற்கு வங்கம் கமார்புகூரை சேர்ந்த நபர் ஒருவரின் மேட்ரிமோனியல் விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன சிறப்பு அந்த விளம்பரத்தில் என்றுதானே யோசிக்கிறீர்கள். இவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஒரு மணமகன் தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரமாக கூறியுள்ளார்.

யோகா பயிற்சியாளர், வசீகரமானவர், எந்த கெட்ட பழக்கமும் இல்லை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் என்று தெரிவித்துள்ளார். தனக்கு வீடு கார் இருப்பதாகவும், பெற்றோருடன் வசித்து வருவதாகவும், கமார் புகூரில் பண்ணை வீடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மணமகளிடமிருந்து தான் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், அழகான, கலரான, உயரமான, ஒல்லியான ஒரு பெண் வேண்டும் என்றும், குறிப்பாக பெண் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த எதிர்பார்ப்பிற்கு வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாழ போகிறார் என்று பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மிகவும் கடினமான விதிமுறைகள் இருக்கின்றன. பெண் கிடைப்பது கடினம் என்றும், ஒரு சிலரது கேளிக்கைகளாக உள்ளன. நிதின் சாங் வானின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *