மாதங்களில் நீ மார்கழி உயர்ந்த மாதமாக மார்கழி இருக்க காரணமென்ன
மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் இறைவனை வழிபட வேண்டும். தன் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து மீண்டு, வெற்றிப் பாதைக்கு செல்ல மார்கழி மாதம் உகந்த மாதமாகும். குளிருக்கு சிறிது நேரம் தூங்கலாம் எனத் தோன்றினாலும், அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் பூக்கோலம் இட வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்கள் இரவிலேயே வாசலில் கோலம் போட்டு வைக்கின்றனர். இது தவறான கருத்து.
- வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற
- மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் இறைவனை வழிபட
- மார்கழி மாதம் அதிகாலை நம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்து
மார்கழி பூஜையைத் தொடங்க
அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்துவிட்டு, பூஜை அறையிலும், வீட்டு வாசலிலும் கோலம் இட வேண்டும். அதன் பிறகு பூஜையைத் தொடங்க வேண்டும். மார்கழி மாதம் அதிகாலை வேளையில் நம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டு இறைவனை வழிபடுதல் அவசியம். மார்கழி மாத சிறப்பு பெண்கள் வாசலில் மாக்கோலம் போடுவது தான்.
உடலுக்கு நன்மை
அதிகாலையில் எழுந்து சுவாசிக்கும் சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு அதிகமாக இருக்கும். இவை உடலுக்கு நன்மையைத் தரும். ஆன்மீக ரீதியாக மார்கழி மாதம் தெய்வங்களை வழிபடுவது, மிகவும் சிறப்பான மாதமாக கூறப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் திருமணங்கள் நடத்தக்கூடாது என்றும், இம்மாதத்தை பீடை மாதம் என்றும் கூறுவது வழக்கம்.
வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற
‘மாதங்களில் நீ மார்கழி’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப மாதங்களில் சிறந்த மாதம் மார்கழி மாதம் தானே. பீடை என்ற அழைக்கக்கூடிய மாதம் மார்கழி. உயர்ந்த, பெருமை என்ற சொல்லே பீடு ஆகும். இந்த பீடு நாளடைவில் பீடை என மாறியது. எனவே இந்த உயர்ந்த மாதத்தை தவறவிடாமல் இறைவனை அதிகாலையில் வழிபட்டு வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவோமாக.