மிரட்டும் மாண்டஸ் புயல்
சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் மாண்டஸ் சுயல் தாக்கம் அதிகரிக்கும் என்று தகவல்கள் கிடைத்து இருக்கின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட நிர்வாக அமைப்புகள் எடுத்த வண்ணம் உள்ளன.
மாண்டஸ் எச்சரிக்கை
சென்னை வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் நாளை இரவுக்கு பின் தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லைகளை கடக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. மாண்டஸ் புயல் கடும் சூறாவளி காற்றினை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் 700 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.
மாண்டஸ் சூறாவழியாய் வீசும்
தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி ,வேலூர் போன்ற மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் என்ற பெயர் ஐக்கிய அரபு நாடு வழங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்பிருப்பதாக சென்னை மாநில வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சேதங்கள் அதிகரிக்கும்
புயல் காரணமாக மிக அதிகமான கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன மேலும் புயல் கரையை கடக்கும் போது நிச்சயமாக சேதங்கள் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது வீடுகளின் மேல் உள்ள மரங்கள் மின்கம்பங்கள் ஆகியவை பாதிக்கப்படலாம் காற்று காரணமாக மிகுந்த சேதங்கள் ஏற்படலாம் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன இன்னும் இரண்டு நாட்களுக்கு மிக அதிக கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன