வாழ்க்கை முறை

ஒரு கதை சொல்லட்டுமா சார்- இதுக்கு மேல முடியல சார்!

ஒரு கதை சொல்லட்டுமா சார்.. அடிச்சு ஊற்றிய மாலை நேரம் 6 முதல் 7 மணி இருள் சூழந்த  மெட்ரோ விடுதியில் அவளும் நானும்  விடுதியிலிருந்து வடை, பஜ்ஜி சாப்பிட கிளிம்பினோம்..

லாங்க் டாப் மற்றும் லாங்க ஸ்கர்ட் அணிந்து இருந்தேன் பற்றாக்குறைக்கு போதி தர்மரை தலை முதல் பாதி உடல் மறைத்த துப்பட்டாவுடன்  நான், கருப்பு ஜினுடன்  தலை மறைந்து என்னைப்போல் அவளும் துப்பாட்டாவை கொண்டு முகம்  தலை மறைத்து இன்னொரு சாமியாரைப் போல் தான் வீதியில் நடந்து சென்றோம்.

எங்கள் நேரம் எப்பொழுதும் வரும் கடைக்கார அண்ணாவைக் காணோம்.. என்ன செய்துதென்று யோசித்து நேராக நடந்து சென்றால் இன்னொரு கடை வரும் என்று செல்ல அந்த கடைக்காரர் அண்ணாவையும் கானோம் மழைக்கு இருவரும் விடுப்பு எடுத்தனரோ  என்ற கேள்வி  ஒரு பக்கம்.. எதுவானாலும் பரவாயில்லை அடுத்த வீதிக்குப் போவோம் என தூறலில் நாங்கள் துவளாமல் இருக்க  கையில் குடையுடன் கடந்து சென்றோம்.

அது ஒரு நகர வீதி  அமைதியாக இருந்தது. அப்பார்ட்மெண்ட்கள் அழகு  பெண்கள் தங்கியிருந்த விடுதிகள் அருகே பார்க் என மக்கள் நடமாடும் இடமாக இருந்தாலும்  அனைவரும் சீக்கு வந்த கோழியைப் போல் தூறலுக்கு பயந்து மயாமாய் போனது போன்ற ஒரு  அமைதி.

ஆனால் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லாமல்  அஞ்சா சிங்கமாக அவ்வீதியில வலம் வந்த அனுபவத்தை வைத்து நடந்தோம். எங்களுக்காகவே எவரும் இன்றி பானிப்பூரி விற்கும் தமிழ் அண்ணா காத்து நிற்கின்றார்.

அங்கு சென்றோம் ஆளுக்கொரு பேல், பானிப்பூரி காரமாக சூடாக மசால் பூரி வாங்கி இருவரும் இரண்டையும் பங்கிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்பொழுது தூரத்தில் இருந்த இதனை கவனித்த மெத்த படித்து ஐடியில் பணியாற்றும் அறிவு ஜீவிகள் இருவர்  பானிப்பூரி விற்கும் அண்ணாவுடன் தமிழ் பேசியவண்ணம் வந்து  சீன் போட தொடங்கினார்கள். அவர்களுடனே அடுத்து வந்த தெலுங்கு பேசும் இருவர் வந்து  அங்குள்ள பண்டகளை கலாய்த்தவாறு மறைமுகமாக  எங்களை கலாய்ப்பது போன்ற ஒரு இன்செக்கியூரியாக இருந்தது.  தெலுங்கில் என் தோழியுடன் பேசியதும் அவர்கள் அமைதியானர்கள்.

இவை அனைத்தும் நடந்து கொண்டிருப்பது பக்கத்து மாநிலத்திலே எனக்கு  தமிழ், தெலுங்கு நன்றாகவே பேச தெரியும் கன்னடம் நன்றாகப் புரியும் கொஞ்சம் பேசுவேன் மலையாளம்  புரியும்.

பானிப்பூரி, பேல்பூரி விற்கும் சகோதரர் நடுநிலையில் மெத்த படிக்காதவர் வேலையே மேல் என்பது  நின்று வேலைப் பார்க்கின்றார், அந்த தூறலில் யாரும் வந்து வாங்கவில்லையே இன்று போனியாகதோ என்ற அச்சத்தில் இருக்க நாங்கள் சென்றதும். அடுத்தடுத்து 4 பேர் என்பதால்  உற்சாகத்தில் வேலையில் இறங்கினார்.

நாங்கள் இருவரும் ஆவிப் பறக்க சூடாக இருந்த மசாலா பண்டங்களுடன்  மழைக்கு இருவரும் ஓரிடத்தில் ஒதுங்கி சாபிட்டு கொண்டிருக்க இதனை சமயமாக கருதி தமிழ் மொழியில் பேசிய இரு  நபர்களும் நாராசமாக வெட்கமின்றி உனகென்னப்பா எப்பொழுதும் உன்னை சுத்தி பெண்கள் யாராவது கடைக்கு வராங்க என்ற பொருள் பொதிந்த வசனங்களை பேசி எங்களை சீண்டினார், எங்களை பார்க்க முடியாதவாறு இருவரும் துப்பட்டாவை இழுத்து  தலை முகம் என முழுமையாக மூடியிருந்ததால் இன்னும் சவுரியமாக கலாய்க்க ஆரம்பித்தனர்.

நிம்மதியாக சாப்பிட்டு கொண்டிருந்த எங்களுக்கு  தர்ம சங்கடமாக இருந்தது. எலியை அடக்கி பெருச்சாலியிடம் மாட்டிக் கொண்டதுபோல் உணர்வு. உடன் வந்தப் பெண்ணுக்கு தெலுங்கு, ஹிந்தி, உருது தெரியும் தென்னாட்டு மொழிகள் மற்றவை தெரியாது. ஆனால் அந்த ஆண்கள் நம்மை சீண்டுகிறார்கள் என்பதை இவளால் உணர முடிந்தது.

ஆனால் முகம் கூட பாக்காமல் மேலும்  போதி தர்மர் போல் நாங்கள் போத்திய தூப்பாட்டாவை நன்கு இழுத்தி போத்தியவாறு சாப்பிட்டுவிட்டு தட்டை வைக்கும் பொழுது தமிழில் அண்ணா இங்கு தட்டை வைக்கின்றேன் என்று கூற விக்கித்துப் போனார்கள்  தமிழில் கலாய்த்த பெத்த படித்த மேதாவிகள்.

சட்டென்று தட்டை வைத்து கையிலிருந்த பணத்தை கொடுத்துவிட்டு  சரசரவென கிளிம்பினோம் உடன்வந்த பெண்ணிற்கோ வேதனையான உணர்வு அவர்கள் என்னபேசினார்கள் நம்மை கை காட்டி தமிழில் என்ன சொன்னார்கள் எனக் கேட்டால், இதுதான் இன்றைய படித்த அநாகரிக ஆண்கள் என்று சொன்னேன். பாவம் பரிதவித்துப் போனால், ஏன் எதுவும் கேட்கவில்லை என்றால்,

எதை கேட்பது பெண்கள் இருவர் தனியாக இருந்தால் அதை சாமார்த்தியமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆண்களை கண்டால் தெருவில் கண்ட மிச்ச சொச்சத்தைப் போல் பார்வையை வீசி, வில்லென புருவத்தை உயர்த்தி நிலத்தில் யாருக்கும் அஞ்சாமல் கிளிம்பிவா,, இது  தான் இந்த கேடுகெட்ட புத்திதான் இன்றைய அநாகரி பிழைப்புத்தான் நமது படித்த தேசியமாக இருக்கின்றது என்ன செய்ய, பெண் என்றால் பேயும் திரும்பும் பெரிதாகப் படித்து இவர்கள் எம்மாத்திரம் மனிதத் தனமாக நடந்து கொள்வார்கள் என நச்சென்று வீரவசனம்பேசி சாமாளித்தேன் அப்பாவியாக அதிர்ச்சி விழியிலே என்னுடன் நடந்தாள்.

எனக்கு  ஒரு கேள்வி  ஆண்களிடம் உண்டு,  நாங்கள் சரியில்லை எங்கள் உடல் மொழி, உடை பேச்சு சரியில்லை என்று எங்களை குறை கூறிவரும் ஆண்களுக்கு ஒரு கேள்வி, சரியாக உள்ளவர்களை கண்டாலும் நீங்கள் விடுவதில்லையே, ஏன், ஆயிரம் பொறுப்புணர்வுடன் சுற்றும் எங்களை கண்டால் ஏன் சதைப்பிண்டத்தைப் போல் பார்கின்றீர்கள்.   எங்களால் ஒரு தெருவில் நினைத்த  உணவை சாப்பிட முடியவில்லை  இதற்கு மேல் நாங்கள் எங்களை பர்தா வைத்துதான் மூட வேண்டும்.

பாரதி கண்ட புதுமைப் பாரதத்தில் படித்தவர்கள் செய்யும் அநாகரிகம் கேட்க யாருண்டு, மனசாட்சியே இல்லாமல் இப்படி நடந்து கொள்ளும் மனிதர்களுக்கு என்ன தண்டனை,  காந்தி  நடு இரவில் பெண் தனியாக  நடக்க வேண்டும் என்றார். என்னைக் கேட்டால் மாலை 7 மணிக்கு  ஒரு பெண் நிம்மதியா  போகமுடிந்தால் அது தான் பாரதம். 

வேலைப்பளுவில்  இருக்குற பெண்களோட  வலிகள் பலருக்கு தெரிவது இல்லை. கழுகு பார்வையால் சாகடிக்கும் இந்த படித்த மேதாவிகளை என்ன சொல்வது. எந்த சட்டம் கொண்டு தடுப்பது. 

பெண்கள் இச்சைப் பொருள் அல்ல… இதை என்று   வேடிக்கைப் பார்க்கும் ஆண்கள் சமுதாயம் உணர்ந்தி  திருந்தும்…  வீட்டில் பெண்களுக்கு வைக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆணுக்கு எப்பொழுது  உருவாக்கப்படும். 

இப்படி விடை தெரியாத கேள்விகளுடன் கதையை முடிச்சுக்கிறேன் சார்.. இதைப் படிக்கும் இதயம் உள்ள படித்த ஆண்கள் இனிமேலாவது முன்ன பின்ன முகம்  தெரியாத  பெண்களை சீண்டுவதை நிறுத்துவார்கள் என நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *