ஹெல்தியான ஸ்நாக்ஸ் மக்கானா ரெசிபி.. தாமரை விதை மசாலா ப்ரை..
தாமரை விதை மசாலா ப்ரை நவராத்திரி நாட்களில் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் இந்த ரெசிபி பொதுவாக செய்யப்படுகிறது.
விரத நாட்களுக்கு இது முக்கியமான ரெசிபி ஆக இருப்பதால் இதை பண்டிகை நாட்களுக்கு ஏற்றதாக செய்யலாம். இதற்கு அதிக பொருட்கள் தேவை இல்லை என்றாலும் அதிக நேரம் தொடர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதால் புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.
ஒரு முறை செய்தால் அடுத்த முறை பழகிக் கொள்வீர்கள். மசாலா மக்கானா என்பது பருத்த தாமரை விதைகள், தாமரை விதைகள் மற்றும் உலர் மசாலாக்களை கொண்டு செய்யப்படும் ஈஸியான எளிமையான மற்றும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெசிபியை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
மக்கானா ஸ்நாக்ஸ்
தேவையானபொருட்கள் : தாமரை விதை ஒரு கப், வறுத்த வேர்க்கடலை அரை கப், மிளகுத் தூள் ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு. நெய் 2 ஸ்பூன், இந்துப்பு தேவையான அளவு.
செய்முறை விளக்கம் : ஒரு கடாயில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கவும்.
பிறகு மக்கா எனப்படும் தாமரை விதைகளை சேர்த்து 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கைவிடாமல் வறுக்க வேண்டும். மக்கானா பொன்னிறமானதும் ஒரு பௌலில் மாற்றி மசாலாக்களை கொண்டு பரிமாறலாம்.
பண்டிகை காலங்களுக்கு ஏற்ற இந்த மொறுமொறு ஸ்நாக்ஸ் மாலை நேர ஸ்நாக்ஸாக செய்யலாம். நவராத்திரி நேரங்களில் பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.