மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆலயம்
மதுரைக்கு வருபவர்கள் எப்பொழுது வந்தாலும் மீனாட்சியை தரிசனம் செய்யாமல் போவதில்லை. எந்த வழியில் உள்ளே சென்றாலும் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு கோபுரங்களில் எந்த வழியாக வேண்டுமானாலும் வெளியே வர முடியும். மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்து வேண்டிக் கொள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். இவர்களுக்கு என்று இரு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
மதுரை மீனாட்சி
இந்தியாவில் மிகப் பெரிய ஆலயங்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அளிக்கும் ஆலயமாக உள்ளன. இந்தக் கோவில் பல ராஜ பரம்பரை ஆண்டு வந்த மிகப் பழமையான கோவில். இதன் மொத்தப் பரப்பு 65 ஆயிரம் சதுர மீட்டர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றிய இந்தக் கோவில். 1655 ஆம் ஆண்டு ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் சிறந்த விரிவாக்கம் பெற்றன. மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை வழியில் மதுரை மாவட்டம் வழியாக இன்றும் பல பேருந்துகள் நின்று செல்கின்றன.
முக்கிய நகரங்களுக்கு
வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்தியாவில் பல முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து நேரடி தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அயல் நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்து வசதி உள்ளது. மேலும் இக்கோவிலில் அதிசயத்தக்க பிரம்மாண்டமான ஆயிரங்கால் மண்டபம் உள்ளன.
மேலும் படிக்க : வைணவ திருத்தலம் திருவெள்ளரை
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும்
இம்மண்டபத்தில் ஆயிரம் தூண்கள் அமைந்துள்ளது. ஒவ்வொன்றும் கலைநயமிக்க சிற்பங்களுடன் உறுதி வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தூண்கள் ஒரே நேர்கோட்டில் காட்சி அளிப்பதாக இருக்கும். ஒப்பற்ற இசைத்தூண்கள் இருக்கும். நுழைவாயில் அருகில் ஒப்பற்ற இசைத் தூண்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தட்ட வெவ்வேறு ஒலி எழுப்பும் நுணுக்கங்களை கொண்ட கலைப்படைப்பாக உள்ளன.
வண்ணமயமான சிற்பங்களை
இக்கோவிலில் மிகப் பெரிய நான்கு வாயில்கள் உள்ளது. இக்கோவிலில் வருகை தருபவர்களுக்கு கட்டுமானங்களில் காணப்படும் வண்ணமயமான சிற்பங்களைக் கண்டால் வியப்பாக இருக்கும். இறைவன் சிவபெருமான் மனித உருவில் சுந்தரேஸ்வரர் ஆக அவதாரம் செய்து கயல் போன்ற கண்களை உடைய மீனாட்சியை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார்.
தாழம்பூ குங்குமம்
காலை 5 மணி முதல் மதியம் 12 30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். இக்கோவிலில் கிடைக்கும் தாழம்பூ குங்குமம் வாசனை மிக்கதாகவும், சக்தி வாய்ந்ததாக உள்ளது. பெண்கள் நெற்றி வகிடுக்கும் இந்த குங்குமத்தை பயன்படுத்துகின்றனர்.
இக்கோவிலுக்கு வருபவர்கள் அருகில் உள்ள விளக்குத்தூண்களுக்கு சென்று அங்கே நிறைய ஷாப்பிங் செய்வதற்கான பொருட்கள் விற்கப்படுகின்றன. இக்கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் இருந்து வெளியே வந்தாலும் நிறைய கடைகள் உள்ளன. சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.
மேலும் படிக்க : சகுண சாஸ்திரங்கள் சொல்லும் குறிப்புகள்