நம்பிக்கை இழக்காத சுபாஷ் சந்திர போஸ்
தோல்விகள் நம்பிக்கை இழக்கும் வரை வருவதில்லை, என்று கூறியவர் நேதாஜி. கட்டாக் நகரில் 1897 ஆண்டில் பிறந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தன் பள்ளிப் படிப்பில் மாநிலத்தில் இரண்டாவது மாணவனாக இடம் பிடித்தவர். தந்தையின் ஆசைக்காக லண்டனில் ஐசிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ஆங்கிலேயரிடம் அடிமை வேலை பார்க்க விரும்பாமல் ஐசிஎஸ் பதவியைத் தூக்கி எறிந்த முதல் இந்தியர் நேதாஜி தான்.
- தோல்விகள் நம்பிக்கை இழக்கும் வரை வருவதில்லை, என்று கூறியவர்.
- சுதந்திரம் மட்டுமே நம் ஒரே குறிக்கோள் என்று தீவிரமாக இறங்கினார்.
- நம்பிக்கையோடு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கியதால் தான், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இன்றளவும் இருக்கிறார் நேதாஜி.
இளம் வயதில் தலைவரான நேதாஜி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1938ம் வருடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பதவி ஏற்றார். அப்போது பத்து 41 வயது வயதானவர்கள் மட்டுமே வகித்த பதவிக்கு, இளம் வயதில் நேதாஜி தேர்வு செய்யப்பட்டார். தொண்டர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தன. பேச்சுவார்த்தை இனி செல்லுபடி ஆகாத மக்களை ஒன்று சேர்த்து போராட வேண்டும். வெள்ளையனை விரட்ட வேண்டும்.
சுபாஷ் சந்திரபோஸ் குறிக்கோள்
சுதந்திரம் மட்டுமே நம் ஒரே குறிக்கோள் என்று தீவிரமாக இறங்கினார். சுபாஷ் சந்திரபோஸ் அதிரடி நடவடிக்கைக்கு ஒத்துழைக்க கட்சியின் மற்ற தலைவர்கள் தயாராக இல்லை. ஏதேதோ கனவுகளுடன் பதவிக்கு வந்த நேதாஜி தன் கைகள் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தார். இது பரிசு அல்ல, விலங்கு என புரிந்து பதவியை ராஜினாமா செய்தார்.
பதவியிலிருந்து சாதிப்பது தான் புத்திசாலித்தனம். இனி மக்களை எப்படி திரட்ட முடியும். நீங்கள் தோற்று விட்டீர்கள்? என எல்லோரும் குறை கூறினார்கள். இந்த பதவி இல்லாமலேயே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தர முடியும். இது எனக்கு ஒரு பின்னடைவு மட்டுமே, தோல்வி அல்ல என்று கூறினார்.
சுவாமி விவேகானந்தரின் வேதவாக்கு
சுவாமி விவேகானந்தரின் இந்த வேதவாக்கு தான் நேதாஜியின் தாரக மந்திரம். நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை. இந்திய எல்லையில் சுமார் 2 லட்சம் ஜப்பானியரும் இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த 6,000 இந்தியர்களும் ஆங்கிலேயருடன் போரிட்டனர். எதிர்பாராத பெரும் மழையால் சேறும், சகதியுமாக இருந்த போர்க்களம்.
ஆங்கிலேயர்கள் நவீன கருவிகளுடன் போரிட்டுக் கொண்டு இருக்க, மோட்டார் சைக்கிள், டெலஸ்கோப், போன்ற எந்த சாதனங்களும் இல்லாமல் உணவும், மருத்துவ வசதிகளும் இல்லாமல், இந்திய படை போரிட்டன. அமெரிக்க விமானப்படை, ஜப்பானியர்களை மொத்தமாகக் கொன்று போட்டன. உடனே ஜப்பான் பிரதமர் போரை நிறுத்தி விட்டு மிச்சமுள்ள தன் வீரர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டார்.
நம்பிக்கை இழக்காத சுபாஷ் சந்திர போஸ்
இந்திய வீரர்களை எழும்பும், தோலுமாக திரும்பியதை கண்டு ரத்த கண்ணீர் வடித்த நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கிய பியூஜி வாரா நாம் தோற்று விட்டோம். இந்தத் தோல்வியிலிருந்து நம்மால் மீளவே முடியாது என்று கதறினார். அப்போதும் உறுதியுடன் நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை என்ற நேதாஜி.
நடந்தவற்றைக் கண்டு மனம் தளராமல் ரஷ்யாவின் ஆதரவைப் பெற விமானம் ஏறினார். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. அதனை ஒரு தோல்வியாக எடுத்துக் கொள்ளாமல் நம்பிக்கையோடு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கியதால் தான், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இன்றளவும் இருக்கிறார் நேதாஜி.