டிஎன்பிஎஸ்சி

முந்தைய ஆண்டுகளுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை மற்றும் விளக்கம்

போட்டி தேர்வுகளில்  கடந்த காலங்களில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பினை விடை மற்றும்  விளக்கத்துடன் இணைத்து கொடுத்துள்ளோம். படியுங்க.

1. 1916இல் லக்னோ ஒப்பந்தம் யார், யாருக்கிடையே நடைபெற்றது?

விடை: காங்கிரஸ், முஸ்லீம் லீக்

விளக்கம்: இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையே லக்னோ ஒப்பந்தம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையே இணைப்பு ஏற்பட்டது.  பத்து வருடங்கள் கழித்து காங்கிரஸின் தீவிரவாதிகள் மற்றும் மிதவாதிகளை ஒன்றினைத்து அன்னிபெசண்ட் மற்றும் திலகர் முயற்சியால் நடைபெற்றது. லக்னோ ஒப்பந்தம்  என்றும் காங்கிரஸ் லீக் திட்டம் என்றும் அழைக்கப்பட்டது.

 2. துணை குடியரசு தலைவர் தகுதிக்கான வயது எத்தனை?விடை: 2. 35 வயது

விளக்கம்: இந்திய துணை குடியரசு தலைவர்  குறித்து சட்டவிதிகள் 63 முதல் 69 வரை இடம்பெற்றுள்ளது. இந்திய துணை குடியரசு தலைவர் பதவிக்கு  போட்டியிட 35 வயது நிறைவு செய்திருக்க  வேண்டும்.  இந்திய துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்தலுக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆதாயம் பெறும் பதவி எதையும் வைத்திருக்க கூடாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உறுப்பினராக இருக்க கூடாது.

3. இந்திய ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற ஜனாதிபதி யார்?

விடை: வி.வீ.கிரி

விளக்கம்: இந்திய குடியரசுத் தலைவர் குறித்து சட்டவிதிகள் 52 முதல் 73 வரை கூறுகின்றன. சட்டவிதி 52 இந்தியாவிற்கு ஒரு குடியரசு தலைவர் இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கின்றது. இந்திய அரசியலமைப்பின் நிர்வாகத் துறை தலைவராக குடியரசு தலைவர் இருக்கின்றார். இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வாக்காளர் குழாம் என அழைக்கப்படும் தேர்தல் கல்லுரி மூலம்   தேர்ந்தெடுங்கப்படுகின்றனர். 

4. நேரு அறிக்கை எப்பொழுது வெளியிடப்பட்டது?

விடை: பிப்ரவரி12,1928 

விளக்கம்: சைமன் கமிஷனுக்கு எதிரான கோசங்களை அடுத்து தனி அரசியலமைப்பு அமைப்பது குறித்து இந்தியாவிற்கு சுயாட்சி பெறுவதும் குறித்தும் முழுமையாக வலியுறுத்தியது. மத்திய மாகாணங்களுக்கான அடிப்படை உரிமைகளை உறுதிசெய்தல் இதன் முக்கிய பணியாகும். நேரு அறிக்கை தேஜ் சாப்ரு, அலி இமாம், எம்எஸ்.ஆனி உள்ளிட்டோரை கொண்டு அடிப்படை உரிமைகள் கடந்து சிறுபான்மையினர் உரிமைகளையும் குறித்து விளக்கத்தை முன் வைத்தது.  

5.ராம் மோகன்  ராய் அவர்களுக்கு ராஜா பட்டத்தை  அளித்தவர் யார்?

விடை: 2.அக்பர்

விளக்கம்: ராம் மோகன்ராய்  ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தவர் ஆவார். ஒரே கடவுள் கொள்கை கொண்டவர். 1828 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜ சபையை தொடங்கினார்.  உருவ வழிப்பாட்டை எதிர்த்தார். 
6. பென்சிலினை கண்டுப்பிடித்தார் யார்?

விடை: 1. அலெக்சாண்டர் பிளெமிங் விளக்கம்: பென்சிலின் என்பது பாக்டீரிய தொற்றை குணப்படுத்த பயன்படுத்த தொகுதி பீட்டா-லாக்டா நுண்ணுயிர் கொள்ளிகளை குறிக்கும். அலெக்சாண்டர் பிளெமிங் 1928 ஆம் ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார். 

7. மனிதனின் ரத்த சுழற்சியை கண்டறிந்தவர் யார்?

விடை: 1. வில்லியம் ஹார்வி

விளக்கம்: இரத்தம் திரவ நிலையிலுள்ள இணைப்பு  திசுவாகும். இரத்ததில் பிளாஸ்மா எனும் திரவ பகுதியும் செல்களும் உண்டு. இரத்ததிலுள்ள குளோபுலின்-நோய் எதிர்ப்பாற்றலுக்கு இன்றியமையாதது ஆகும். மனித ரத்ததில் பிளாஸ்மா என்ற திரவப் பகுதியும் இரத்த செல்கள் என்ற திடப்பகுதியும் காணப்படுகின்றன. 

8. அடிப்படை உரிமைகள்  நிறுத்தப்படுவது எப்பொழுது?விடை: 2.குடியரசு தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம் விளக்கம்: அடிப்படை உரிமைகள் இந்தியாவின் அரசியல் அமைப்பில் பகுதி III சட்டவிதி 12 முதல் 32 வரை தெரிவிக்கின்றது. அடிப்படை உரிமைகள் இந்தியாவின் மாக்னா கார்டா என அழைக்கப்படுகின்றன. மொத்தம் 7 அடிப்படை உரிமைகள் கொண்டவற்றில் சொத்துரிமையானது 1978 ஆம் ஆண்டு மசோதாவில் விளக்கப்பட்டது. 

9. மின்னுட்டத்தின் அலகு யாது?

விடை: 1.கூலும் 

விளக்கம் : மின்சாரம் என்பது மின்னோட்டத்தின் ஓட்டமேயாகும். ஓரு கூலும் மின்னூட்டம் ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் எதாவதுதொரு குறுவெட்டில் பரப்பில் பாய்ந்தால் கடத்தியில் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் ஆகும். மின்னோட்டத்தினை அளவிடும் கருவி மின்னோட்டமானி எனப்படும். 

10. பிஹெச்(PH) அளவை அறிமுகப்படுத்தியது ?

விடை: S.P.L.சாரன்சன் 

விளக்கம்:  பி.ஹெச்(PH) என்பது ஒரு கரைசலின் அமிலம் அல்லது காரத்தின் வலிமையை அந்த கரைசலின் ஹைட்டிரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலே PH அளவீடு எனப்படுகின்றது. நல்ல உடல் ஆரோக்யமிக்க மனிதனின் உடம்பிலுள்ள தோலின் பிஹெச் 4.5 லிருந்து 6 ஆக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *