கிருஷ்ண ஜெயந்தி 2023 வழிபடும் நேரம், நெய் வைத்தியம், வழிபடும் முறை, வழிபடும் மந்திரம்
கிருஷ்ணர் என்றாலே நமது நினைவுக்கு வருவது அவரின் குழந்தை முகமும் குறும்புத்தனமும் தான் கண்ணனின் லீலைகளை சொல்வதற்கு வார்த்தைகளை இல்லை அவரின் கதைகளை கேட்கும் பொழுது நாமே குழந்தையாக மாறி அவருடன் இருப்பது போன்று ஒரு எண்ணம் உருவாகும் அளவிற்கு கிருஷ்ணர் லீலைகளை செய்துள்ளார். அத்தகைய குறும்புக்கார கிருஷ்ணரை அவர் பிறந்த தினத்தன்று வழிபட்டால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் நினைத்த காரியம் நிறைவேறும் குழந்தை இல்லாதவர்கள் அவரை நினைத்து விரதம் இருந்து மனமுருக வேண்டினால் குழந்தை பாக்கியம் கூடிய விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கிருஷ்ணர் இவ்வுலகில் தோன்றிய திருநாளே கிருஷ்ண ஜெயந்தியாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது அன்றைய நாள் அனைவரும் குழந்தையாக மாறி கோலாகலமாக கிருஷ்ணரின் பிறந்த நாளை கொண்டாடுவர்.
இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி 6.09.2023 மற்றும் 7.09.2023 ஆகிய நாட்களில் நமக்கு வருகிறது. கிருஷ்ணர் ரோகினி நட்சத்திரத்தில் அஷ்டமி திதி என்று பிறந்தார் அந்த நட்சத்திரமும் திதியும் வரும் நேரத்தில் நாம் வணங்கினால் மிக உகந்தது.
இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி வழிபடும் நேரம்
கோகுலாஷ்டமி
நாள் : 6.09.2023
அஷ்டமி இரவு 9.13 pm மணிக்கு துவங்குகிறது ரோகிணி நட்சத்திரம் மாலை 3.25 pm மணியிலிருந்து துவங்குகிறது
நாள் : 7.09.2023
அஷ்டமி இரவு 9.14 pm மணியுடன் நிறைவடைகிறது. ரோகிணி நட்சத்திரம் மாலை 4.00 pm மணியுடன் நிறைவடைகிறது
மேற்கண்ட இந்த நேரத்தில் நீங்கள் கிருஷ்ணரை வழிபடலாம். விரதம் இருந்து வீட்டில் வழிபடுபவர்கள் 6 ஆம் தேதி இரவு வழிபடலாம். கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் 7 ஆம் தேதி காலை வழிபடலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் வழிபடுங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி வழிபடும் முறை
கிருஷ்ண ஜெயந்தி வழிபடும் முறை நீங்கள் காலையில் இருந்து விரதம் இருந்து மாலை கிருஷ்ணர் பிறந்த திதியும் நட்சத்திரமும் தோன்றிய நேரத்தில் கிருஷ்ணரின் மந்திரங்களை ஜெபித்து வழிபடலாம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரே நமது வீட்டிற்கு நேரடியாக வந்து அருள் பாலிப்பார் என்பது நம்பிக்கை எனவே கிருஷ்ண ஜெயந்தி யானை என்று நமது வீடுகளில் பச்சரிசி மாவால் வாசப்படி விழுந்து கிருஷ்ணர் உள்ள பூஜை அறை வரை நீங்கள் கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து அவரை வரவேற்கலாம்.
கிருஷ்ணர் பாதம் வரைந்து வணங்குவது மனதிற்கு ஒரு மகிழ்ச்சியையும் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்த உணர்வையும் நமக்கு கொடுக்கும் உங்கள் வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அவர்களை பச்சரிசி மாவை தொட்டு நடக்க வைக்கலாம் குழந்தைகள் வேண்டி வழிபடுபவர்கள் நீங்களே உங்கள் கைகளால் கணவர் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து ஒவ்வொரு பாதங்களாக வைத்து வணங்கினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
கிருஷ்ணருக்கு பிடித்த நெய் வைத்தியம்
கண்ணனை நினைக்கும் போதே நம் கண் முன் வருவது வெண்ணை தான் ஆம் கிருஷ்ணருக்கு மிக மிக பிடித்த ஒன்று வெண்ணெய். பால் சம்பந்தப்பட்ட எந்த உணவாக இருந்தாலும் கிருஷ்ணர் விரும்பி உண்பார் உதாரணமாக பால் தயிர் மோர் நெய் வெண்ணெய் மேலும் பாலால் செய்த இனிப்புகள் ஆகிய எதை வைத்தாலும் கிருஷ்ணனுக்கு பிடித்த நெய் வைத்தியம் ஆகும். பால் சம்பந்தப்பட்ட இந்த பொருட்கள் அனைத்தையும் சிறிது வைத்து வழிபடலாம் இல்லையேல் ஏதாவது ஒன்று பால் மட்டும் வைத்துக் கூட வணங்கலாம் அவரவர் வசதிக்கு ஏற்பாடு போல் நீங்கள் நெய்வேத்தியம் செய்து கொள்ளலாம் தவறில்லை.
சீடை, அடை ,பொரி ,அவல் , முறுக்கு லட்டு இவையும் கிருஷ்ணனுக்கு பிடித்த பொருட்களே இவற்றையும் அவருக்கு நெய் வைத்தியமாக வைத்து நீங்கள் வழிபடலாம்.
மனதார நினைத்து நீங்கள் வைக்கும் பொரி கூட கிருஷ்ணர் விரும்பி உண்ணும் உணவாக அமையும் எனவே இவை அனைத்தையும் வைக்க வேண்டும் என்று கவலை வேண்டாம் உங்களுக்கு முடிந்த பொருட்களை வைத்து மனதார வழிபட்டாலே கிருஷ்ணனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். உங்கள் நெய் வைத்தியத்தை அவர் மனதார மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்.
கிருஷ்ண ஜெயந்தி ராம நாமம்
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
கிருஷ்ணரின் இந்த ராம நாமத்தை நாம் 108 முறை கிருஷ்ண ஜெயந்தி என்று கூறி வழிபடும் பொழுது வாழ்வின் மொத்த மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்வில் இருந்த கஷ்டங்கள் விலகி செல்வங்கள் பெருகும் நீங்கள் நினைத்த செயல் இனிதே நிறைவேறும்.
கண்ணனின் பெயரான ஸ்ரீ கிருஷ்ணா என்பதை அனைத்து மந்திரங்களுக்கும் நிகரான ஒரு சொல்லாகும். எனவே நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணா என்பதை 108 முறை போற்றி வழிபட்டாலே கிருஷ்ணனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் பாதம் வரைந்து கிருஷ்ணரின் படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவித்து அவருக்கு பிடித்தமான பால் நெய் சீடை போன்ற நெய் வைத்தியங்கள் வைத்து மேலும் உங்களால் முடிந்த பல வகைகள் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து சூடம் பத்தி காண்பித்து கிருஷ்ணரின் ராம நாமம் , 108 போற்றி மந்திரம் ஆகியவற்றை சொல்லி மனதார வேண்டினால் கிருஷ்ணரின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைக்காக வேண்டுபவர்கள் நினைத்தபடி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி ஆன இந்த நன்னாளில் கிருஷ்ணருக்கு பிடித்த செயல்களை செய்து கிருஷ்ணரின் பரிபூரண அருளைப் பெற வாழ்த்துக்கள்.