கொரிய பெண்களின் வீட்டு அழகு குறிப்பு…!
கண்னாடி போல் தோல் கொண்ட கொரிய பென்களின் அழகு ரகசியம் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.
1-எலுமிச்சை, ஸ்ட்ராபெரி பேஸ் மாஸ்க்
எலுமிச்சை ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இதில் இயற்கையாகவே வைட்டமின் சி உள்ளது. இதனால் தோல் சுருக்கங்களை குறைத்து உங்களை இளமையாக காட்ட எலுமிச்சை உதவுமாம். அதேசமயம் ஸ்ட்ராபெரி அழற்சி எதிர்ப்பு கொண்டவை. மேலும் முக்கப்பருக்களை நீக்க ஸ்ட்ராபெரி உதவும், மேலும், புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும், இறந்த சரும செல்களை அகற்றவும் ஸ்ட்ராபெரி பேஸ் மாஸ்க் உதவுகிறது.
எலுமிச்சை, ஸ்ட்ராபெரி பேஸ் மாஸ்க் செய்முறை:-
2 துளி எலுமிச்சை சாறு மற்றும் 5-6 ஸ்ட்ராபெர்ரிகளை சேர்த்து பிசைந்து, 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவி, 30 நிமிடங்கள் பின், வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை நீங்கள் தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
2-அரிசி மாவு, கற்றாழை பேஸ் மாஸ்க்:-
அரிசி மாவில் ஆக்சிஜனேற்றம் அதிகமாக உள்ளதால், தோலில் ஏற்படும் சுருக்கங்களை மறைத்து உங்களை எப்போதும் இளமையாக காட்டும், மேலும் கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்கவும், முகப்பருவை போக்கவும் உதவுகிறது. கற்றாழை, அரிசி மாவு பேஸ் மாஸ்க் உங்களை எப்போதும் புத்துணர்சியுடன் வைத்திருக்க உதவுமாம்.
செய்முறை:-
3 டேபிள் ஸ்பூன் நன்றாக அரைத்த அரிசி மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழையை கூலாக சேர்த்து குளிர்ந்த நீருடன் நன்றாக கல்லக்கவும், பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவவும். ஒரு மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இது உங்கள் சருமத்தை உடனடியாக ஆற்றவும் புத்துணர்ச்சியூட்டவும் செய்யும். ஒருவாரம் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சிறந்த முடிவை எதிர்பார்க்கலாம்.