செய்திகள்தேசியம்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்..!! வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த செப்டிக் டேங்க் தூய்மை செய்யும் தொழிலாளி மணிகண்டன் (30) என்பவர் கத்தியைக் காட்டி கடத்திச் சென்றுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின்னர் சிறுமியை மீட்டதோடு மணிகண்டனையும் கைது செய்தனர்.

இதையடுத்து சிறுமியை கடத்தி சென்ற மணிகண்டனிடம் விசாரணை நடத்தியதில், அவர் சிறுமியை சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கடந்த மூன்றரை வருடங்களாக புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி வாதங்கள் நடைபெற்றது.

அப்போது சிறுமியின் தந்தையைக் கொலை செய்துவிடுவேன் எனக் கூறி மணிகண்டன் தன்னை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்ததை அடுத்து, தலைமை நீதிபதி செல்வநாதன் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *