ஷூட்டிங் ஸ்பாட்டை கண்காணிக்கும் குஷ்பூ
சினிமாத்துறை ஊரடங்கால் ஸ்தம்பித்து போன நிலையில் இருக்க சின்னத்திரைக்கு தற்போது ஒரு பெருமூச்சு விட வாய்ப்பு கிடைத்துள்ளது.
மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்க இன்றளவும் பெரிய அளவில் தளர்வு ஏதும் இல்லாமல் ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. வெள்ளித்திரையில் சிலர் படத்தின் ஷூட்டிங்கை முடித்தவர்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பாதியில் நிற்க, சிலருக்கு படத்தின் ஷூட்டிங்கே பாதியில் நிற்க, சிலருக்கு திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் படங்களை வெளியிட முடியாமல் என்ன செய்வது என யோசிக்க காலங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
சின்னத்திரையில் படம் பிடித்து வைத்திருந்த எபிசோடுகள் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு முடிய அதனைத் தொடர முடியாமல் பாதியில் நிற்கிறது. அவ்வாறு வெள்ளித்திரை சின்னத்திரை என்று எதுவுமே தொடரமுடியாமல் நடுவில் தொங்கி நிற்கிறது.
சமீபகாலத்தில் இத்துறை சார்ந்த விண்ணப்பத்திற்கு ஷூட்டிங்கை திரும்ப ஆரம்பிப்பதற்கு 20 ஆட்களைக் கொண்ட குழு மட்டுமே செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.
நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூடிய குழுவின் எண்ணிக்கை இருபது தான் என்பது கடினம். ஆகையால் 20 நபர்கள் கொண்ட குழுவை கொண்டு ஷூட்டிங் செய்வது இயலாது என பெப்சி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இயக்குனர் ஆர். கே. செல்வமணி அவர்கள் பல பேட்டிகளிலும் அரசிடமும் விண்ணப்பித்துள்ளார்.
அனைத்து அலுவலகங்களும் ஜூன் மாதம் ஓரளவு இயங்க துவங்க சினிமா துறைக்கும் சிறிய தளர்வை அரசு நிர்ணயித்துள்ளது. இருபதிலிருந்து 60 ஆட்கள் கொண்ட குழுவால் ஷூட்டிங்கை துவங்கலாம் ஆனால் தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.
அதற்கிணங்க சின்னத்திரை சீரியல்கள் சூட்டிங்கை துவங்கியுள்ளது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தென்னிந்திய முன்னணி நடிகையான குஷ்பூவும் இயக்குனர் ஆர். கே. செல்வமணி வந்து மேற்பார்வை இட்டனர்.
அவர்கள் செய்த இன்ஸ்பெக்சனை நடிகை குஷ்பூ அவர்கள் தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மூலமாக பரிமாறி உள்ளார்.
அனைவரும் கொரோனாவின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட நிலையில் அனைத்து கலைஞர்களும் மற்றும் பணியாளர்களும் தகுந்த பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழில் எவ்வாறு முக்கியமோ அதைவிட ஒவ்வொரு தனிமனிதனின் உடல் நலமும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
சின்னத்திரைக்கு விடிவு காலம் வந்த நிலையில் வெள்ளித்திரைக்கு எப்பொழுது விடிவு காலம் வருமோ என்று கவலையுடன் காத்து இருக்கின்றனர்.