ஆன்மிகம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

கார்த்திகை பரணி தீபம் 2023 ஏற்றும் நேரமும் முறையும்

நட்சத்திரங்களில் உயர்ந்த நட்சத்திரமான பரணி நட்சத்திரம் எமதர்மனுக்கு உரிய நட்சத்திரமாகும். வருடத்தில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபட்டால் நமது பித்ருக்களின் முழு பலனும் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம். யார் வீடுகளில் பரணி தீபம் ஏற்றி வழிபடுகிறார்களோ அவர்களின் முன்னோர்களுக்கு எமலோகம் வரை செல்வதற்கான வெளிச்சம் கிடைக்கும்.

அந்த வெளிச்சத்தின் பலனாக நமது முன்னோர்கள் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேற ஆசியை தந்து விட்டு செல்வர். எமதர்மனுக்கு உரிய நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றி வழிபடுவதால் எமதர்ம ராஜாவின் சாபத்திலிருந்து நீங்கி வளமுடன் வாழ வழிவகுக்கும்.

பரணி தீபம் 2023

  • இந்த வருடம் பரணி தீபமானது நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு திருவண்ணாமலையில் ஏற்றப்படுகிறது.
  • திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் அதே நேரத்தில் அதாவது நவம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 4 30 மணிக்குள்நாமும் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
  • பரணி தீபம் ஏற்றுவதற்கு முந்தைய நாளை நமது வீடுகளை சுத்தம் செய்து நாம் ஏற்றும் தீபங்களை கழுவி காயவைத்து சுத்தமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதிகாலை திருவண்ணாமலைகள் பரணி தீபம் ஏற்றும் அதே நேரத்தில் நாமும் வீட்டில் தீபங்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
  • அவ்வாறு நீங்கள் தீபம் ஏற்றும் பொழுது தீபங்கள் கிழக்கு முகம் பார்த்தபடி ஏற்ற வேண்டும்.
  • முதலில் வீட்டின் வாசற்படியில் இரண்டு தீபங்கள் ஏற்றிவிட்டு அதன் பின்பு வீடுகளுக்குள் 5 தீபங்கள் வெளிச்சம் வரும்படி ஏற்ற வேண்டும்.
  • பரணி தீப திருநாளன்று ஏழு தீபங்கள் ஏற்றுவது முறையாகும்.
  • கிழக்கு முகம் பார்த்து பரணி தீபங்கள் ஏற்றிய பின்பு உங்களது முன்னோர்களை மனதில் நினைத்து வழிபடுங்கள் அவர்கள் உங்களது குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்து குடும்பத்திற்கு வரும் தீமைகளை நீக்கி ஆரோக்கியமாக வாழ்வதற்கு துணையாக நிற்பார்கள்.
  • பரணி தீபம் ஏற்றுவதால் முன்னோர்களின் மனதும் எமதர்மராஜாவின் மனதும் குளிர்கிறது எனவே நீங்கள் நோய்நொடியின்றி எமனின் பிடியில் இருந்து விலகி ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *