டேஸ்ட் பண்ணுங்க கொஞ்சம்…!!
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பல நோய்களை தடுப்பதுடன், உடல் எடையை குறைக்கவும் முடியும். வரகு அரிசி ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவி சுத்தம் செய்து இதனுடன், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், தயிர் சேர்த்து கொதிக்க வைத்து வெந்ததும் இறக்கி விடவும். இதை காலை உணவாக சாப்பிடலாம். உடல் பருமன் குறையும். உடலுக்கு சத்துக்களை கொடுக்கும். அற்புதமான உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது.
உடலுக்கு தேவையான சக்தி
தேவையற்ற நச்சை வெளியேற்றும் தன்மை கொண்டது. வரகு அரிசி உபயோகபடுத்தி, குழந்தைகள் உண்ணும் கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். அரிசி, கோதுமையை விட இதில் நார்சத்து அதிகம் உள்ளது. தானியங்களுடன் ஒப்பிடும் போது அதிக சத்தும், புரத சத்து, தாது உப்பு கொண்டுள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடலுக்கு உகந்தது. தாது பொருள் அதிகம். விரைவில் செரிமானம் அடைந்து, உடலுக்கு தேவையான சக்தியும் கொடுக்கும்.
நரம்பு நோய்
இரும்பு, கால்சியம் அதிகம் நார்சத்து மிகுந்து பைட்டிக் அமிலம் குறைந்தும் உள்ளது. கல்லீரல் செயல்பாடை தூண்டி, கண் நரம்பு நோய்களை தடுக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். மூட்டு வலியை குறைக்கும். வரகை லேசாக வறுத்து போடி செய்து இதனுடன், தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கொழுக்கட்டையாக வேக வைத்து சாப்பிடலாம். அரிசிக்கு பதிலாக வரகை வைத்து இட்லி, தோசை, பணியாரம், மாவாக செய்து சாப்பிடலாம். பொங்கல், பாயாசம் செய்து சாப்பிடலாம்.
உடலுக்கு போஷாக்கு
வரகு, பூண்டு, மிளகு, ஜீரகம் சேர்த்து கஞ்சியாக செய்து காலை உணவாக உண்பதன் மூலம் உடலுக்கு போஷாக்கு கிடைக்கும். நோய்களை விரட்ட முடியும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கு, வரகு அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. வீக்கத்தை கரைக்கும். உடலுக்கு வலிமையை சேர்க்கும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். உப்புமா, தாளிச்ச சாதம், புளியோதரை, செய்து உண்ணலாம்.
காலம் காலமாக இந்த வரகை பொதுவாக உண்டு வந்த ஒரு உணவு தானியம் என்பதால் இதை நாமும் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். சிறுநீர் பெருக்கி. மலச்சிக்கலை போக்கும். ஒரு டம்பளர் வரகில் நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம், காப்பர், மாங்கனீஸ், வைட்டமின் பி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.