செய்திகள்டெக்னாலஜிதேசியம்

40 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடம்!

வரே வா! ஜியோ ஜெயமோ ஜெயமாகச் சாதனை படைத்திருக்கிறது. ஜியோ இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றது. இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ இயங்கி வருகின்றது.

  • இந்தியாவில் ஜியோ 40 கோடி வாடிக்கையாளருடன் முதல் இடத்தில் இருக்கின்றது.
  • ஏர்டெல் நெட்வொர்க்கை பின்னுக்குத்தள்ளி ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் இயங்குகின்றது.
  • ஊர்டங்கு காலத்திலும் ஜியோ பயனாட்டாளர்வள் 35 லட்சம் பேர் அதிகமாகியிருக்கின்றனர்.

ஜியோ நெட்வொர்க்

இதுகுறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் சந்தையில் ஜியோ நெட்வொர்க் 2016 ஆம் ஆண்டு தனது பயணத்தைத் தொடங்கியது. இலவசம் என்ற பெயரில் தொடங்கிய இந்த நிறுவனம் அதிரடியாக அறிவிப்போடு மக்களைக் கவர்ந்தது மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ஜியோ ஒரு பெரும் போட்டியாக இருந்தது.

ஜியோவின் வேகம்

ஜியோவின் வேகம் செயல்பாடு காரணமாக அதிக வாடிக்கையாளர்கள் ஜியோ விற்கு மாறினர். இந்திய நெட்வொர்க் சந்தையில் ஏர்டெல் முந்தி ஜியோ முதலிடத்தில் நிற்கின்றது. இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ தன் பக்கம் இழுத்து இருக்கின்றது.

ஊரடங்கிலும் 35 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோ

தற்பொழுது கொரோனா காலம் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஜியோ 35 லட்சம் பேருக்கு மேல் சேவைகளைத் தன்பக்கம் ஈர்த்து தெரிகின்றது. ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. அது வாடிக்கையாளர்களின் சூட்சமத்தை திறந்து வைத்திருக்கிறது.

தொடர்ந்து கொடுக்கும் அறிவிப்புகள் மக்களைக் கவர்ந்து வருகின்றன. இதனால் ஜியோ தொடர்ந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *