என்ன ஜவான் பட கதை இதுதானா? எதிர்பார்ப்பு நடக்குமா!!!
ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமான ஃபேமஸ் இயக்குனர் அட்லி தனது முழு திறமை மற்றும் உழைப்பின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வைத்து தற்போது ஜவான் படத்தை இயக்கியுள்ளார்

இந்த படத்தில் மிக முன்னணி பிரபலங்களான நயன்தாரா பிரியாமணி தீபிகா படுகோனே ஆகியோர் நடித்த உள்ளனர் மேலும் இசையில் இசைஞானியை மிஞ்சும் அனிருத் இசை அமைத்து உள்ளார் எனவே இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று சொல்லலாம்..

இந்த படத்துல ஷாருக்கானா இது அப்படின்னு கேக்குற அளவுக்கு ஒரு வேறுபட்ட அசத்தலான தோற்றத்துல ஷாருக்கான் நடித்திருக்கிறார் இதுவரை எந்த படத்தில் இல்லாத அளவுக்கு இந்த படத்துல இளமையான தோற்றம் மொட்டை அடிச்சிட்டு ரொம்ப வயதானவர் போல இருக்க தோற்றம் போர் வீரர்கள் போல தோற்றம் என பல வருடங்களில் இந்த படத்துடன் நடித்து அசத்தியிருக்காரு..
ஜவான் படம் காமெடி ,திரில்லர் ,ஆக்சன் அப்படின்னு சொல்லிட்டு எல்லாம் கலந்த கலவையாக இந்த படம் இருக்கு. நயன்தாராவும் போலீஸ் கெட்டப்ல செம ஸ்டைலா நடிச்சிருக்காங்க..

செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ் ,ஹிந்தி என பல மொழிகளில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தை பார்க்கிறதுக்காக ரசிகர்கள் அனைவரும் ரொம்ப ஆர்வமா காத்துட்டு இருக்காங்க படம் எப்படி இருக்கும் எந்த மாதிரி கதை இருக்க போகுதுன்னு எல்லாருமே எதிர்பார்த்து இருக்காங்க..
மேலும் படிக்க : நேற்று நடிகையர் திலகம் இன்று அண்ணாத்த நாளை சர்காரு வாரி பட்டா