சுற்றுப்புறத்தில் கொரோனா வைரஸா? பாதுகாப்பாக இருக்க இத செய்யுங்க.
நாளுக்கு நாள் எளிதாக பரவும் கொரோனா வைரஸ் சுற்றுப்புறத்தில் யாருக்காவது பாசிட்டிவாக இருந்தால் உடனடியாக பதட்டப்படாமல் அமைதியாக சிந்தியுங்கள். 5 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை சூடான தண்ணீர் குடியுங்கள். நோயெதிர்ப்பு மண்டலத்தை தொடர்ந்து இயங்க வைப்பதற்காக உணவு திட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
பாதுகாப்பு கருவிகளை அணிவதோடு மட்டுமல்லாமல் உங்கள் கைகளை உங்கள் முகத்தில் இருந்து விலக்கி வைப்பது அவசியம். முகத்தை தொடக் கூடாது என்பதை உணர்வுபூர்வமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல நேரும் போதெல்லாம் ஒரு கையில் சனிடைசர் எடுத்துக் கொள்ளுங்கள்.
நாம் எதைக் தொடுக்கிறோமோ அவற்றில் கவனமாக இருக்க வேண்டும். எவற்றையெல்லாம் தொடுகிறோம் என்பதை கவனித்து கவனமாக இருப்பது அவசியம். மேலும் நாம் அடிக்கடி உபயோகிக்கும் மேற்பரப்புகளை ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினி யை கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
லிப்ட்க்ற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தலாம். சமூக இடைவெளி நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இரண்டு பேருக்கு மேல் வெவ்வேறு வீடுகளில் சேர்ந்தவர்கள் லிப்ட் டில் பகிர்ந்து கொள்ளாமல் படிக்கட்டுகளை உபயோகிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகத்திற்கு பொருத்தமாக இருக்கும் முகமூடி அணிவது வலுவாக அறிவுறுத்தப்படுகிறது.
தொற்று நோய் பரவத் தொடங்கி ஒன்பது மாதங்கள் மற்றும் நம்முடைய சுற்றுப்புறங்களிலும் கொரோணா பரவும் நிலையை அடைந்து விட்டோம். இது போன்ற சூழலில் நம்முடைய பயம் நிச்சயம் அதிகரிக்கும். தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பானது தான். தொலைதூர விதிமுறைகளையும், சுவாச சுகாதார நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.