ஈரான் போரினால் LPG சிலிண்டருக்கு அடுத்தபடியான சிக்கல்- இந்தியாவில் விவாசியிகளுக்கு உரம் தட்டுப்பாடு
இஸ்ரேல்- ஈரான் போரினால் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்த பட்டுள்ளது இதனால் பல ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு சமைக்க சிரமத்தில் உள்ளனர், அது ஒரு பக்கம் இருக்க இந்தியாவின் முதுகெலும்பான விவசாயதிற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது

Source credit – Google
இந்தியாவானது சுமார் 70% உரங்கள் யூரியா, டிஏபி போன்ற உரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியாவுக்கு எல்பிஜி வரத்து நிறுத்தப்பட்டிருப்பது போல்,இந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வர வேண்டும்.
உலகின் இரண்டாவது பெரிய உர நுகர்வாளராக இந்தியா திகழ்கிறது. கப்பல்கள் போக்குவரத்து நிறுத்தம் இந்தியாவில் உரத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உண்டாக்கியுள்ளது. இதனை விவசாயிகள் சங்கம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

Source Credit – Google
அந்த ஒரு நாட்டை மட்டும் சாராமல் பிற நாடுகளில் இருந்தும் உரத்தினை இறக்குமதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர், ஏனெனில் உரம் தட்டுப்பாடு ஏற்படுமாயின் உரத்தின் விலை உயர்த்தப்படும் என அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்
இதனுடன் சேர்த்து “ஈரான்-அமெரிக்க போர் ஆட்டம் காணும் கோவை, திருப்பூர்” பற்றியும் படிக்கவும்

